பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது பகவான் புத்தரின் சிந்தனைகளில் நம்பிக்கை கொண்டவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது: பிரதமர்

Posted On: 24 OCT 2024 10:43AM by PIB Chennai

பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க மத்திய அரசு முடிவு செய்ததற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பகவான் புத்தரின் சிந்தனைகளில் நம்பிக்கை கொண்டவர்களிடையே இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார். கொழும்பில் இந்திய பண்பாட்டு உறவுகள் சபையால் நடத்தப்பட்ட 'பாலி மொழியை  செம்மொழியாக்கல்' என்ற குழு விவாதத்தில் பங்கேற்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் மற்றும் துறவிகளுக்கும் திரு மோடி நன்றி தெரிவித்தார்.

இலங்கையில் இந்தியா வெளியிட்டுள்ள பதிவுக்கு பதிலளித்து பிரதமர் மோடி கூறயிருப்பதாவது:

"பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க இந்திய அரசு முடிவு செய்திருப்பது பகவான் புத்தரின் சிந்தனைகளில் நம்பிக்கை கொண்டவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதை அறிந்து உவகையடைந்தேன். கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் மற்றும் பிக்குகளுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.”

***

(Release ID: 2067565)

TS/PKV/RR/KR


(Release ID: 2067611) Visitor Counter : 53