பிரதமர் அலுவலகம்
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மை, வளம் ஆகியவற்றை நிலைநாட்ட ஆசியான்-இந்தியா இடையே விரிவான உத்திசார் கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான கூட்டறிக்கை
Posted On:
10 OCT 2024 5:41PM by PIB Chennai
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கமான ஆசியான் மற்றும் இந்தியா இடம் பெற்றுள்ள ஆசியான்-இந்தியா அமைப்பின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளான நாங்கள், 21-வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டுக்காக லாவோஸ் நாட்டின் வியன்டியானில் இன்று கூடியுள்ளோம்;
இதுவரை நடைபெற்ற ஆசியான் – இந்தியா பேச்சுவார்த்தைகளின், அடிப்படையில் நடைபெற்ற உச்சி மாநாடுகளின் பல்வேறு கூட்டறிக்கைகளுக்கு இணங்க, 1992-ம் ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து ஆசியான் – இந்தியா பேச்சுவார்த்தை உறவுகளை வழிநடத்திச் சென்ற அடிப்படைக் கொள்கைகள், பகிர்ந்து கொள்ளப்பட்ட மதிப்புகள் மற்றும் நெறிமுறைகளின் அடிப்படையில் வழிநடத்தப்படும் ஆசியான் – இந்தியா விரிவான உத்திசார் கூட்டாண்மையை ஊக்குவிப்பதற்கான எங்களது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.
அரசியல்-பாதுகாப்பு, பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு மூலம் ஆசியான் – இந்தியா உறவுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு பங்களிப்பு செய்துள்ள இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையின் தசாப்தத்தை வரவேற்கிறோம் .
தென்கிழக்கு ஆசியாவிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான நிலம் மற்றும் கடல்வழிகள் மூலம் எளிதாக்கப்பட்ட வலுவான நாகரிக இணைப்புகள் மற்றும் கலாச்சார பரிமாற்றங்களை அங்கீகரித்தல், இந்தோ-பசிபிக்கின் பல்வேறு கடல்கள், பெருங்கடல்களை உள்ளடக்கிய, ஆசியான்-இந்தியா விரிவான உத்திசார் கூட்டாண்மைக்கு வலுவான அடித்தளத்தை வழங்குவதை உறுதி செய்கிறோம்.
ஆசியான் – இந்தியா விரிவான உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான, இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையின் பத்தாண்டு காலத்தை முன்னிட்டு 2024-ம் ஆண்டில் நடைபெற்ற நடவடிக்கைகள் மற்றும் முன்முயற்சிகளை வரவேற்கிறோம் ;
ஆசியான் மையத்தன்மை மற்றும் வளர்ந்து வரும் பிராந்திய கட்டமைப்பில் ஒற்றுமை மற்றும் ஆசியான் தலைமையிலான அமைப்புகள் மூலம் நெருக்கமாக பணியாற்றுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அங்கீகரித்தல், ஆசியான் – இந்தியா உச்சி மாநாடு, கிழக்கு ஆசிய உச்சி மாநாடு, இந்தியாவுடனான அமைச்சர்கள் மட்டத்துக்குப் பிந்தைய மாநாடு, ஆசியான் பிராந்திய அமைப்பு, ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் விரிவாக்கப்பட்ட ஆசியான் கடல்சார் அமைப்பு, ஆசியான் ஒருங்கிணைப்பு, ஆசியான் சமூகத்தை கட்டியெழுப்பும் செயல்முறைக்கான ஆதரவு ஆசியான் இணைப்புக்கான பெருந்திட்டம் 2025, ஆசியான் ஒருங்கிணைப்புக்கான முன்முயற்சி ஆகியவற்றை அங்கீகரிக்கிறோம்.
பெருங்கடல்கள் மற்றும் கடல்களில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட கட்டமைப்பை மாநாடு அமைக்கிறது. தேசியத்திற்கு அடிப்படையான உத்தி முக்கியத்துவம் வாய்ந்தது. கடல்சார் துறையில் பிராந்திய மற்றும் உலகளாவிய நடவடிக்கை, ஒத்துழைப்பு, அதன் ஒருமைப்பாடு ஆகியவை பராமரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
பகிரப்பட்ட ஜனநாயக மாண்புகள், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டில் வலுவான நம்பிக்கை, சட்டத்தின் ஆட்சி மற்றும் ஐநா சாசனத்தின் கொள்கைகள் மீதான பகிரப்பட்ட உறுதிப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் நம்பிக்கையின் மூலம் பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளத்திற்கான ஆசியான் – இந்தியா கூட்டறிக்கையை அமல்படுத்துவதற்கான முயற்சிகளைப் பாராட்டுகிறோம்.
பன்முகத்தன்மை மற்றும் ஐநா சாசனத்தில் பொறிக்கப்பட்டுள்ள நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகள், சர்வதேச சட்டங்களை மதிப்பது ஆகியவற்றில் நமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் அதே வேளையில், வளர்ந்து வரும் பன்முக உலகளாவிய கட்டமைப்புக்கு மத்தியில் முக்கிய சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்களில் இந்தியாவின் வளர்ந்து வரும் துடிப்பான பங்களிப்பை கவனத்தில் கொள்கிறோம்.
இந்தக் கூட்டறிக்கை மூலம் அறிவிக்கப்படுவதாவது:
1. அமைதி, ஸ்திரத்தன்மை, கடல்சார் பாதுகாப்பு, சுதந்திரமான கடல்வழிப் போக்குவரத்து மற்றும் வான்வழிப் பயணம், தடையற்ற சட்டபூர்வமான கடல்சார் வர்த்தகம் உட்பட கடல்களின் பிற சட்டப்பூர்வ பயன்பாடுகள், சர்வதேச சட்டத்தின் உலகளாவிய அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளுக்கு இணங்க, சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு, சர்வதேச கடல்சார் அமைப்பு ஆகியவற்றால், பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப, தடையற்ற சட்டபூர்வமான கடல் வர்த்தகம் தொடர்பான சச்சரவுகளுக்கு அமைதியான தீர்வுகளை ஊக்குவித்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். இது சம்பந்தமாக, தென் சீனக் கடலில் சம்பந்தப்பட்டவர்களின் நடத்தை குறித்த பிரகடனத்தை முழுமையாகவும் திறம்படவும் செயல்படுத்துவதை நாங்கள் ஆதரிக்கிறோம், மேலும் சர்வதேச சட்டத்திற்கு இணங்க தென் சீனக் கடலில் ஒரு பயனுள்ள நடத்தை விதிமுறையை விரைவில் எதிர்பார்க்கிறோம்.
2. 2023-ம் ஆண்டில் முதல் ஆசியான்-இந்தியா கடல்சார் பயிற்சி மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு குறித்த நிபுணர்களின் பணிக்குழுவின் இணைத் தலைமை (2024-2027) உட்பட ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தின் வரம்பிற்குள் பாதுகாப்பு ஒத்துழைப்பை உருவாக்குதல், அத்துடன் 2022-ல் ஆசியான்-இந்தியா பாதுகாப்பு அமைச்சர்களின் முறைசாரா கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட இரண்டு முன்முயற்சிகளையும் நடைமுறைப்படுத்துவதை ஆதரிக்கிறோம்;
3. கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, சைபர் பாதுகாப்பு, ராணுவ மருத்துவம், நாடுகடந்த குற்றங்கள், பாதுகாப்பு தொழில், மனிதாபிமான உதவி, பேரழிவு நிவாரணம், அமைதி காத்தல், கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள், நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல். பயணங்களின் பரிமாற்றம், கூட்டு ராணுவப் பயிற்சி, கடல்சார் பயிற்சி, கடற்படைக் கப்பல்களின் துறைமுக அழைப்புகள் மற்றும் பாதுகாப்பு உதவித்தொகை ஆகியவற்றின் மூலம் இது அடையப்படும்;
4. கடல்சார் ஒத்துழைப்பு குறித்த ஆசியான்-இந்தியா கூட்டு அறிக்கையை செயல்படுத்துவதை முன்னெடுப்பது மற்றும் கடல்சார் பாதுகாப்பு, நீலப் பொருளாதாரம், நிலையான மீன்வளம், கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கடல் பல்லுயிர் மற்றும் பருவநிலை மாற்ற பிரச்சினைகள் போன்ற பகுதிகளில் தொடர்ந்து ஒத்துழைப்பது என முடிவெடுக்கப்பட்டது.
5. ஐ.நா. மற்றும் பலதரப்பு செயல்முறைகள் மூலம் பன்முகத்தன்மையை வலுப்படுத்துவதை ஊக்குவித்து பணியாற்றுதல், உலகளாவிய கவலைகளை நிவர்த்தி செய்தல், பகிரப்பட்ட இலக்குகள் மற்றும் ஒன்றையொன்று நிரப்பும் முன்முயற்சிகளை பின்பற்றுதல், நமது மக்களின் நலனுக்காக நீடித்த வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
6. இந்தோ-பசிபிக் குறித்த ஆசியான் கண்ணோட்டம் மற்றும் இந்தோ-பசிபிக் பெருங்கடல் முன்முயற்சி இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளத்திற்கான ஒத்துழைப்பு குறித்த ஆசியான்-இந்தியா கூட்டு அறிக்கையை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
7. ஆசியான் – இந்தியா சரக்கு வர்த்தக ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்வதை விரைவுபடுத்தி, அதை மேலும் பயனுள்ளதாகவும், பயனாளிகளுக்கும், வர்த்தகங்களுக்கும் உகந்ததாகவும், தற்போதைய உலகளாவிய வர்த்தக நடைமுறைகளுக்கு பொருத்தமானதாகவும் மாற்றவும், பரஸ்பரம் பயனளிக்கும் ஏற்பாடுகளை மேம்படுத்தவும், ஆசியான் மற்றும் இந்தியா இடையே பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
8. நீடித்த வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக பரஸ்பர அக்கறை கொண்ட பகுதிகளில் விநியோகச் சங்கிலிகளில் ஏற்படக்கூடிய அபாயங்களைக் கண்டறிந்து முன்கூட்டியே நிவர்த்தி செய்வது குறித்த தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் அதே வேளையில், மாறுபட்ட, பாதுகாப்பான, வெளிப்படையான மற்றும் நெகிழ்திறன் கொண்ட விநியோகச் சங்கிலிகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
9.செயற்கை நுண்ணறிவு, பிளாக்செயின் தொழில்நுட்பம், பொருட்களின் இணையம், ரோபோட்டிக்ஸ், குவாண்டம் கம்ப்யூட்டிங், 6-ஜி தொழில்நுட்பம் உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பு, டிஜிட்டல் இணைப்பு மற்றும் நிதி தொழில்நுட்பத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து புத்தொழில் நிறுவனங்களுக்கான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கி வலுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
10. கூட்டு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க டிஜிட்டல் எதிர்காலத்திற்கான ஆசியான் – இந்தியா நிதியம் தொடங்கப்பட்டதை வரவேற்கிறோம்;
11. செயற்கை நுண்ணறிவின் விரைவான முன்னேற்றம் உலகளாவிய டிஜிட்டல் பொருளாதாரத்தின் செழிப்பு மற்றும் விரிவாக்கத்திற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு, சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிப்பதன் மூலம் பாதுகாப்பான, பொறுப்பான, நம்பகமான செயற்கை நுண்ணறிவின் முழுத் திறனையும் பயன்படுத்த ஒத்துழைத்தல். மக்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில், பொறுப்பான, உள்ளடக்கிய மற்றும் மனிதகுலத்தை மையமாகக் கொண்ட முறையில் சவால்களுக்குத் தீர்வு காண்பதன் மூலம் பொது நலனுக்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த நாம் முயற்சிக்க வேண்டும்;
12. நீடித்த சமூகப் பொருளாதார வளர்ச்சி மற்றும் பொருளாதார வளத்தை ஊக்குவிப்பதில் சுற்றுலாவின் முக்கிய பங்கை அங்கீகரிப்பதோடு, நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான வழிகளில் ஒன்றாக சுற்றுலாவின் முக்கிய பங்கை அங்கீகரிக்கிறோம். அதேசமயம், மக்களுக்கு இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்த 2025-ம் ஆண்டை ஆசியான் – இந்தியா சுற்றுலா ஆண்டாக கொண்டாடும் முன்மொழிவை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த முயற்சியில், ஆசியான் – இந்தியா சுற்றுலா ஒத்துழைப்பு பணித் திட்டம் 2023-2027-ஐ அமல்படுத்துவதற்கும், சுற்றுலாக் கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான கூட்டுத் திட்டங்களை ஆதரிப்பதற்கான தீவிர ஒத்துழைப்பை ஆராய்வதற்கும், திறனை வளர்ப்பதற்கும், உயர்தர சுற்றுலாத் தொழிலை உறுதி செய்வதற்கும் நாங்கள் ஆதரவு அளிக்கிறோம். பயணப் பங்குதாரர்களிடையே வணிக நெட்வொர்க்குகளின் விரிவாக்கம், நிலையான மற்றும் பொறுப்பான சுற்றுலாவின் நடைமுறை, அத்துடன் சுற்றுலா போக்குகள் மற்றும் தகவல்களின் பரிமாற்றம் ஆகியவற்றையும் நாங்கள் ஊக்குவிக்கிறோம். கூடுதலாக, தகவல் தொடர்புகளை மேம்படுத்துதல், சுற்றுலா முதலீட்டு வாய்ப்புகளை ஊக்குவித்தல், அத்துடன் முக்கிய சந்தைகள், கப்பல் சுற்றுலா, சுற்றுலா தரங்களின் வளர்ச்சி, கூட்டு ஊக்குவிப்பு ஆகியவற்றை நாங்கள் ஆதரிக்கிறோம்;
13. ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, பொது சுகாதார அவசரகால தயார்நிலை, சுகாதார நிபுணர்களுக்கான பயிற்சி, மருத்துவ தொழில்நுட்பம், மருந்துகள், தடுப்பூசி பாதுகாப்பு மற்றும் தற்சார்பு, தடுப்பூசி மேம்பாடு மற்றும் உற்பத்தி, அத்துடன் பொது மற்றும் பாரம்பரிய மருத்துவம் உள்பட பொது சுகாதாரத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் சுகாதார அமைப்புகளை வலுப்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
14.பல்லுயிர் மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதோடு, எரிசக்தி ஒத்துழைப்புக்கான ஆசியான் செயல் திட்டம் 2021-2025 மற்றும் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முன்னுரிமைகள் மற்றும் உயிரி வட்ட-பசுமை வளர்ச்சி போன்ற பிற தேசிய மாதிரிகள் மற்றும் முன்னுரிமைகளுக்கு ஏற்ப தூய்மையான, புதுப்பிக்கத்தக்க மற்றும் குறைந்த கார்பனை கொண்ட எரிசக்தி ஆகியவற்றில் ஒத்துழைப்பை கண்டறிய முனைப்பு காட்டப்படும்.
15. பேரிடர் மேலாண்மை குறித்த மனிதாபிமான உதவிக்கான ஆசியான் ஒருங்கிணைப்பு மையம் மற்றும் இந்தியாவின் தேசிய பேரிடர் மேலாண்மை முகமை இடையிலான உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தம் போன்ற அறிவு பகிர்வு, சிறந்த நடைமுறைகள், திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப உதவிகள் மூலம் உள்கட்டமைப்பு அமைப்புகளில் பேரழிவு மற்றும் பருவநிலை தாங்கும் தன்மையை ஊக்குவிக்க முடிவு எடுத்துள்ளோம்.
16. ஆசியான் இணைப்பு பெருந்திட்டம் 2025, அதன் தொடர் ஆவணமான ஆசியான் இணைப்பு உத்திசார் திட்டம், இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கை, பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி தொலைநோக்கு ஆகியவற்றின் கீழ் பிராந்தியத்தில் இந்தியாவின் இணைப்பு முன்முயற்சிகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை ஆராய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆசியான் மற்றும் இந்தியா இடையேயான தொடர்பை மேம்படுத்துதல், இந்தியா-மியான்மர்-தாய்லாந்து முத்தரப்பு நெடுஞ்சாலையை விரைவில் நிறைவு செய்து செயல்படுத்துவது உட்பட நீடித்த மற்றும் நெகிழ்திறன் கொண்ட உள்கட்டமைப்புடன் நிலம், கடல்சார் களங்களில் போக்குவரத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதே நேரத்தில் லாவோஸ் கம்போடியா மற்றும் வியட்நாம் வரை அதன் கிழக்கு நோக்கிய விரிவாக்கத்தை எதிர்நோக்குகிறோம்.
17. ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச நிதிக் கட்டமைப்பு, சர்வதேச நிதி நிறுவனங்கள், பன்னாட்டு வளர்ச்சி வங்கிகள் உள்ளிட்ட பலதரப்பு உலகளாவிய ஆளுகை கட்டமைப்பில் பன்முகத்தன்மையை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறோம். தற்போதைய உலக யதார்த்த நிலை, உலகளாவிய தெற்கின் தேவைகள் மற்றும் அபிலாஷைகளுக்கு ஏற்ப ஜனநாயகபூர்வமான, சமத்துவமான, பிரதிநிதித்துவம் ஆகிய நோக்கங்களுக்கு ஏற்றதாக அவற்றை உருவாக்குவதை விரும்புகிறோம்.
18. பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட கோட்பாடு, அனைத்து தொடர்புடைய உலகளாவிய சவால்களுக்கும் பொருந்தும் என்பதை அங்கீகரித்து, உலகளாவிய தெற்கின் கவலைகள் மற்றும் முன்னுரிமைகளுக்கு பதிலளிக்கும் உள்ளடக்கிய மற்றும் சமநிலையான சர்வதேச நிகழ்ச்சி நிரலுக்கு அழைப்பு விடுப்பது என முடிவு எடுத்துள்ளோம்.
19.இந்தியப் பெருங்கடல் விளிம்பு சங்கம், பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி, இந்தோனேசியா-மலேசியா-தாய்லாந்து வளர்ச்சி முக்கோணம், சிங்கப்பூர்-ஜோகூர்-ரியாவ் வளர்ச்சி முக்கோணம், புருனே தாருஸ்ஸலாம்-இந்தோனேசியா-மலேசியா-பிலிப்பைன்ஸ் கிழக்கு ஆசியான் வளர்ச்சிப் பகுதி, மேகாங்-கங்கா ஒத்துழைப்பு உள்ளிட்ட சாத்தியமான ஒருங்கிணைப்புகளை ஆராய்வதுடன், சாவோ பிராயா-மேகாங் பொருளாதார ஒத்துழைப்பு உத்தி, ஆசியான் மற்றும் இந்தியாவின் விரிவான, பரஸ்பர வளர்ச்சி, மேம்பாடு ஆகியவற்றுடன் துணை பிராந்திய வளர்ச்சியை சீரமைப்பதன் மூலம் சமமான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான ஆசியான் மற்றும் இந்தியாவின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கிறோம்.
20.ஆசியான்-இந்தியா விரிவான உத்திசார் கூட்டாண்மை மூலம் நமது ஒத்துழைப்பை வலுப்படுத்த முயற்சிக்கும் அதே வேளையில், பொதுவான அக்கறை கொண்ட பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சனைகளில் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவது என முடிவெடுத்துள்ளோம்.
***
PKV/AG/DL
(Release ID: 2063965)
Visitor Counter : 40
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam