பிரதமர் அலுவலகம்
ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்
இணையதளக் குற்றங்கள் போன்ற புதிய சவால்களை சமாளிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்
இடுகை இடப்பட்ட நாள்:
04 OCT 2024 6:43PM by PIB Chennai
இந்திய காவல் பணி பயிற்சி அதிகாரிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (04-10.2024) கலந்துரையாடினார்.
பல ஆண்டுகளாக காவல்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்தும், இணையதளக் குற்றங்கள் போன்ற புதிய சவால்களை சமாளிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் திரு நரேந்திர மோடி விவாதித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :
“ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகளுடன் இன்று காலை கலந்துரையாடினேன். மக்களுக்கு சேவை செய்யும் அவர்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். காவல்துறை எவ்வாறு மாறியுள்ளது என்பது குறித்தும், இணையதளக் குற்றங்கள் போன்ற புதிய சவால்களை சமாளிப்பது குறித்தும் இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டது”
---
PLM/KPG/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2062151)
வருகையாளர் எண்ணிக்கை : 71
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam