பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பாராலிம்பிக் போட்டிகளில் இந்திய அணி இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பதக்கங்களை வென்று சாதனை படைத்திருப்பது குறித்து பிரதமர் பெருமிதத்தையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 04 SEP 2024 4:33PM by PIB Chennai

பாராலிம்பிக் போட்டிகளில் நமது நாட்டிற்கு இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பதக்கங்களை வென்று இந்திய பாராலிம்பிக் அணி சாதனை படைத்திருப்பது குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி பெருமிதமும் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளார். விளையாட்டு வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்தை பாராட்டியுள்ள திரு மோடி, ஒவ்வொரு வீரரையும் அவர்களின் குறிப்பிடத்தக்க சாதனைகளுக்காக புகழ்ந்துரைத்துள்ளார்.

 

இது தொடர்பாக பிரதமர் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

 

"இந்தியா பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைகிறது!

 

நமது வியத்தகு பாராலிம்பிக் குழுவினர் எந்தவொரு பாராலிம்பிக் போட்டியிலும் இல்லாத அளவுக்கு நமது நாட்டிற்காக அதிக பதக்கங்களைக் குவித்து சாதனையை படைத்துள்ளனர். இது நமது விளையாட்டு வீரர்களின் அர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் உறுதியைக் காட்டுகிறது. ஒவ்வொரு வீரருக்கும் வாழ்த்துக்கள்.

#Cheer4Bharat"

***

PKV/RR/KR/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2051822) வருகையாளர் எண்ணிக்கை : 60