பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

2024 பாரிஸ் பாராலிம்பிக்: இரண்டாவது பதக்கம் வென்ற தடகள வீராங்கனை ப்ரீத்தி பாலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 02 SEP 2024 12:01AM by PIB Chennai

நடைபெற்று வரும் 2024 பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகளில் இரண்டாவது பதக்கம் வென்ற தடகள வீராங்கனை பிரீத்தி பாலுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

23 வயதான இவர், மகளிர் 200 மீட்டர் டி35 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதுடன், பாராலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் டிராக் மற்றும் ஃபீல்ட் தடகள வீராங்கனை என்ற பெருமையைப் படைத்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:

"பெண்களுக்கான 200 மீட்டர் டி35 போட்டியில் வெண்கலப் பதக்கத்துடன் அதே 2024 பாராலிம்பிக் #Paralympics2024 பதிப்பில் தனது இரண்டாவது பதக்கத்தை வென்று ப்ரீத்தி பால் வரலாற்று சாதனை படைத்துள்ளார்! அவர் இந்திய மக்களுக்கு உத்வேகம் அளித்துள்ளார். அவரது அர்ப்பணிப்பு உண்மையிலேயே பாராட்டுக்குரியது.

#Cheer4Bharat"

BR/KR

 

 

***

 


(रिलीज़ आईडी: 2050749) आगंतुक पटल : 123
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , Urdu , English , Manipuri , Gujarati , Kannada , Assamese , Odia , हिन्दी , Marathi , Bengali , Bengali-TR , Punjabi , Malayalam