பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

லட்சாதிபதி சகோதரி நிகழ்ச்சி, மகளிரின் கல்வி, சமூக, பொருளாதார அரசியல் அதிகாரமளித்தலை உறுதி செய்துள்ளது: பிரதமர்

Posted On: 29 AUG 2024 3:13PM by PIB Chennai

சுயஉதவிக் குழுக்கள் மூலம் தேசக் கட்டமைப்பில் லட்சாதிபதி சகோதரிகளின் பங்களிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதை பிரதமர் திரு நரேந்திர மோடி அங்கீகரித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் மகளிர் நலனுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் முன்னெப்போதும் இல்லாதவை என்று அவர் கூறியுள்ளார். இதன் மூலம் நாட்டில் உள்ள பெண்கள் முன்னேறவும் வளம் பெறவும் முடியும் என்றும் வளர்ச்சியின் புதிய பரிணாமங்களை உருவாக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் செளகானின் எக்ஸ் தள பதிவு குறித்து பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:

“சுயஉதவிக் குழுக்கள் மூலம் தேசக் கட்டமைப்பில் லட்சாதிபதி சகோதரிகளின் பங்களிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான் @ChouhanShivraj பதிவிட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் மகளிர் நலனுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் முன்னெப்போதும் இல்லாதவை. இதன் மூலம் நாட்டில் உள்ள பெண்கள் முன்னேறவும் வளம் பெறவும் முடியும் என்றும் வளர்ச்சியின் புதிய பரிணாமங்களை உருவாக்க முடியும். மகளிருக்கு கல்வி, சமூக, பொருளாதார அரசியல் அதிகாரமளித்தல் உறுதி செய்யப்பட்டுள்ளது.”

***

(Release ID: 2049723)
SMB/RR/KR


(Release ID: 2049771) Visitor Counter : 45