பிரதமர் அலுவலகம்
ஐந்து புதிய மாவட்டங்கள் உருவாக்கத்தையொட்டி லடாக் மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து
லடாக்கில் ஐந்து புதிய மாவட்டங்களை உருவாக்குவது சிறந்த நிர்வாகம் மற்றும் முன்னேற்றத்தை நோக்கிய ஒரு நடவடிக்கையாகும்: பிரதமர்
प्रविष्टि तिथि:
26 AUG 2024 12:54PM by PIB Chennai
ஐந்து புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதையொட்டி லடாக் மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜான்ஸ்கர், டிராஸ், ஷாம், நுப்ரா, சாங்தாங் ஆகிய புதிய மாவட்டங்கள் இப்போது அதிக கவனம் செலுத்தப்பட்டு, சேவைகளையும் வாய்ப்புகளையும் மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டு வரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் எக்ஸ் பதிவைப் பகிர்ந்து, பிரதமர் கூறியிருப்பதாவது:
"லடாக்கில் ஐந்து புதிய மாவட்டங்களை உருவாக்குவது சிறந்த நிர்வாகம் மற்றும் முன்னேற்றத்துக்கான ஒரு நடவடிக்கையாகும். ஜான்ஸ்கர், டிராஸ், ஷாம், நுப்ரா மற்றும் சாங்தாங் ஆகியவை இப்போது அதிக கவனம் செலுத்தப்பட்டு, சேவைகளையும் வாய்ப்புகளையும் மக்களுக்கு இன்னும் நெருக்கமாகக் கொண்டுவரும். அங்குள்ள மக்களுக்கு வாழ்த்துக்கள்".
**
(Release ID: 2048870)
PKV/KPG/KR
(रिलीज़ आईडी: 2048880)
आगंतुक पटल : 133
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Hindi_MP
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam