பிரதமர் அலுவலகம்
நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர் திருமதி அர்சு ராணா தியூபா பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்
प्रविष्टि तिथि:
19 AUG 2024 9:48PM by PIB Chennai
நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர் திருமதி அர்சு ராணா தியூபா பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார். திருமதி தியூபாவை இந்தியாவிற்கு வரவேற்ற பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தியா - நேபாளம் இடையேயான வளர்ச்சி பங்களிப்பில் தொடர்ந்து உத்வேகத்தை எதிர்நோக்கியிருப்பதாகக் குறிப்பிட்டார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"நேபாள வெளியுறவு அமைச்சர் அரசு ராணா தியூபா-வை (@Arzuranadeuba) வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவும் நேபாளமும் நெருங்கிய நாகரிக உறவுகளையும், முற்போக்கான, பன்முகக் கூட்டுறவையும் பகிர்ந்து கொள்கின்றன. நமது வளர்ச்சி ஒத்துழைப்பில் தொடர்ச்சியான வேகத்தை எதிர்நோக்குகிறோம்."
***************
PLM/KV
(रिलीज़ आईडी: 2048567)
आगंतुक पटल : 82
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam