பிரதமர் அலுவலகம்
ஜப்பான் வெளியுறவு, பாதுகாப்பு அமைச்சர்கள், பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் சந்திப்பு
Posted On:
19 AUG 2024 9:53PM by PIB Chennai
ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சர் திருமதி கமிகாவா யோகோ, பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு கிஹாரா மினோரு ஆகியோர் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தனர். 3-வது இந்தியா-ஜப்பான் 2+2 வெளியுறவு - பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்திற்கு முன்னதாக திரு நரேந்திர மோடி இருவரையும் வரவேற்று கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் போது இந்தியா-ஜப்பான் இடையேயான ராணுவ பாதுகாப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரதமர் கேட்டறிந்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"3-வது இந்தியா-ஜப்பான் 2 + 2 வெளியுறவு - பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்திற்கு முன்னதாக ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் கமிகாவா யோகோ (@Kamikawa_Yoko), ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் கிஹாரா மினோரு (@kihara_minoru) ஆகியோரை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா-ஜப்பான் பாதுகாப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இந்த சந்திப்பில் எடுத்துரைக்கப்பட்டது. இந்திய-பசிபிக் பிராந்தியத்திலும், அதற்கு அப்பாலும் அமைதி, நிலைத்தன்மை, வளத்தை ஊக்குவிப்பதில் இந்தியா-ஜப்பான் ஒத்துழைப்பு முக்கிய பங்கு வகிக்கும் என்பது மீண்டும் உறுதிசெய்யப்பட்டது."
*************************
PLM/KV
(Release ID: 2048566)
Visitor Counter : 43
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam