பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மான்டே காசினோ போரின் நினைவுச் சின்னத்தில் பிரதமர் அஞ்சலி செலுத்தினார்

Posted On: 21 AUG 2024 11:55PM by PIB Chennai

வார்சாவில் உள்ள மான்டே காசினோ போர் நினைவிடத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இரண்டாம் உலகப் போரின்போது, இத்தாலியில் நடைபெற்ற புகழ்பெற்ற மான்டே காசினோ போரில் இணைந்து போரிட்ட இந்தியா, போலந்து மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த வீரர்களின் தியாகம் மற்றும் வீரத்தை நினைவுகூரும் வகையில் இந்த நினைவுச்சின்னம் அமைந்துள்ளது. இந்த நினைவிடத்திற்கு பிரதமர் மேற்கொண்ட பயணம், இந்தியா மற்றும் போலந்து இடையேயான ஆழமான வேரூன்றிய உறவுகள் மற்றும் பகிரப்பட்ட  வரலாறு ஆகியவற்றை அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவும், பலருக்கும் தொடர்ந்து ஊக்கமளிப்பதாகவும் உள்ளது.

BR/KR

***

 


(Release ID: 2047521) Visitor Counter : 55