நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2023-24-ம் நிதியாண்டில் 1 லட்சத்துக்கும் அதிகமான காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன – அங்கீகரிக்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 1.25 லட்சத்தைத் தாண்டியது

Posted On: 22 JUL 2024 2:33PM by PIB Chennai

காப்புரிமைகள் வழங்குவதிலும் புத்தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதும், வளர்ச்சி, அறிவுசார் முன்னேற்றம், புதுமைக் கண்டுபிடிப்புகள் ஆகியவை அதிகரித்து வருவதைக் காட்டுகிறது. மத்திய நிதி, கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை, புதுமை சார்ந்த தொழில்துறை அமைப்பின் வலுவான முன்னேற்றத்தை எடுத்துரைக்கிறது.

 

கடந்த சில ஆண்டுகளில் தொழில்துறை ஆராய்ச்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. உலகளாவிய புதுமைப் படைப்பு குறியீட்டில் இந்தியா தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருவதே இதற்குச் சான்றாகும்.

2014-15 ஆம் ஆண்டில் 5,978 ஆக இருந்த காப்புரிமைகளின் எண்ணிக்கை 2023-24 ஆம் ஆண்டில் 1,03,057 ஆக பதினேழு மடங்கு அதிகரித்துள்ளது என்று ஆய்வறிக்கை கூறுகிறது.

2023-28 ஆம் ஆண்டில் ரூ. 50,000 கோடி மதிப்பீட்டில் அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையை (ஏ.என்.ஆர்.எஃப்) அமைப்பதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இந்திய தொழில்துறையில் அறிவியல் ஆராய்ச்சிக்கு உத்திசார்ந்த வழிகாட்டுதலை வழங்கும் ஒரு உயர் அமைப்பாக செயல்படும்.

 

இந்தியாவின் துடிப்பான புத்தொழில் சூழல் அமைப்பை ஆய்வறிக்கை எடுத்துக்காட்டுகிறது. 45 சதவீதத்திற்கும் அதிகமான புத்தொழில் நிறுவனங்கள் 2-ம் நிலை நகரங்களிலும் 3-ம் நிலை நகரங்களிலும் உள்ளன.  உள்நாட்டுத் தொழில் வர்த்தகத் தொழில் மேம்பாட்டுத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2016-ம் ஆண்டில் 300 ஆக இருந்த நிலையில் மார்ச் 2024-ல் 1.25 லட்சமாக அதிகரித்துள்ளது என்று  பொருளாதார ஆய்வறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2034921

*****

SMB/PLM/KPG/KR


(Release ID: 2035616) Visitor Counter : 55