பிரதமர் அலுவலகம்
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தஷாஷ்வமேத் படித்துறையில், பிரதமர் கங்கா பூஜை மேற்கொண்டார்
இடுகை இடப்பட்ட நாள்:
18 JUN 2024 9:18PM by PIB Chennai
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள தஷாஷ்வமேத் படித்துறையில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (18-06-2024) கங்கா பூஜை மேற்கொண்டார். கங்கா ஆரத்தியையும் அவர் பார்வையிட்டார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
"காசியில் உள்ள அன்னை கங்கையின் கரையில் இருந்து பதிவிடுகிறேன். 140 கோடி இந்தியர்களின் அமைதி, செழிப்பு மற்றும் நல்வாழ்வுக்காகப் பிரார்த்திக்கிறேன்"
பிரதமர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில் கூறியிருப்பதாவது:
"காசியில் கங்கா ஆரத்தியைக் காண்பது மனதை மயக்கும் அனுபவம். புனித கங்கையின் அழகு, அதனைச் சுற்றியுள்ள பிரகாசம் மற்றும் பக்தி ஆகியவை அதை மேலும் சிறப்பானதாக்குகின்றன."
-----
PKV/PLM/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 2026375)
வருகையாளர் எண்ணிக்கை : 99
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Hindi_MP
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam