பிரதமர் அலுவலகம்
ப்ரிக்ஸ் வெர்சாய்ல்ஸ் அருங்காட்சியகம் 2024-க்கான உலகளாவிய தேர்வில் ஸ்மிரிதிவனம் இடம் பிடித்திருப்பது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்
Posted On:
15 JUN 2024 6:23PM by PIB Chennai
2001-ம் ஆண்டு ஏற்பட்ட துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், குஜராத்தின் கட்சில் அமைக்கப்பட்ட அருங்காட்சியகம், ப்ரிக்ஸ் வெர்சாய்ல்ஸ் அருங்காட்சியகங்கள் 2024-க்கான உலகத் தேர்வில் தேர்வு செய்யப்பட்டிருப்பதற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ப்ரிக்ஸ் வெர்சாய்ல்ஸ்-சின் சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர், வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:
"2001-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக கட்ச் பகுதியில் ஸ்மிருதிவனம் அமைக்கப்பட்டுள்ளது. இது பின்னடைவில் இருந்து மீண்டு வருதல் மற்றும் தைரியத்தை நினைவூட்டுகிறது. ப்ரிக்ஸ் வெர்சாய்ல்ஸ் அருங்காட்சியகங்கள் 2024-க்கான உலகத் தேர்வில் இந்த அருங்காட்சியகம் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது."
இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.
***
AD/PLM/DL
(Release ID: 2025594)
Visitor Counter : 63
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Hindi
,
Hindi_MP
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada