பிரதமர் அலுவலகம்

"ரெமல்" புயலின் தாக்கம் குறித்து பிரதமர் ஆய்வு


பாதிக்கப்பட்ட மாநிலங்களில் புயலின் தாக்கம் குறித்து பிரதமரிடம் விளக்கப்பட்டது

பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு அரசு தொடர்ந்து முழு ஆதரவு அளிக்கும் என்று பிரதமர் கூறினார்

தேவைக்கேற்ப என்.டி.ஆர்.எஃப் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன; விமானங்கள், சாலைகள் மூலம் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன


Posted On: 02 JUN 2024 2:34PM by PIB Chennai

நிலைமையைக் கண்காணித்து, மறுசீரமைப்புக்குத் தேவையான உதவிகளை வழங்க இந்த விஷயத்தை தவறாமல் ஆய்வு செய்யுமாறு உள்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் அறிவுறுத்தினார்

புதுதில்லி லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தமது இல்லத்தில் "ரெமல்" புயலின் தாக்கம் குறித்து பிரதமர் இன்று காலை ஆய்வு செய்தார்.

கூட்டத்தின் போது பாதிக்கப்பட்ட மாநிலங்களில் சூறாவளியின் தாக்கம் குறித்து பிரதமருக்கு விளக்கப்பட்டது. மிசோரம், அசாம், மணிப்பூர், மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட மனித உயிரிழப்புகள் மற்றும் வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. தேவைக்கேற்ப தேசிய பேரிடர் மீட்பு படையினர் குவிக்கப்பட்டு, இந்தக் குழுக்கள் விமானம் மற்றும் சாலைகள் மூலம் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. இந்தக் கூட்டத்தில், உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக குறிப்பிடப்பட்டது.

புயலால் பாதிக்கப்பட்ட மாநிலத்திற்கு மத்திய அரசு தொடர்ந்து முழு ஆதரவு அளிக்கும் என்று பிரதமர் கூறினார். நிலைமையைக் கண்காணித்து, மறுசீரமைப்புக்குத் தேவையான உதவிகளை வழங்க இந்த விஷயத்தை தவறாமல் ஆய்வு செய்யுமாறு பிரதமர் உள்துறை அமைச்சகத்திற்கு அறிவுறுத்தினார்.

பிரதமரின் முதன்மைச் செயலாளர், அமைச்சரவைச் செயலாளர், உள்துறை செயலாளர், புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர், தேசிய பேரிடர் மீட்புப் படையின் தலைமை இயக்குநர், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் செயலர், பிரதமர் அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

***

SRI/PKV/KV

 



(Release ID: 2022548) Visitor Counter : 59