பிரதமர் அலுவலகம்

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் பூடான் அரசுமுறைப் பயணத்தின் பயன்கள்

Posted On: 22 MAR 2024 3:10PM by PIB Chennai

புரிந்துணர்வு ஒப்பந்தம்/ஒப்பந்தம்/செயல் திட்டம்

 

வ.எண்

புரிந்துணர்வு ஒப்பந்தம்/ஒப்பந்தம்/செயல் திட்டம்

விவரம்

பூடான் தரப்பு பிரதிநிதி

இந்திய தரப்பு பிரதிநிதி

1

இந்தியாவில் இருந்து பூடானுக்கு பெட்ரோலியம், எண்ணெய், மசகு எண்ணெய் மற்றும் தொடர்புடைய பொருட்களை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பெட்ரோலியம், எண்ணெய், மசகு எண்ணெய் தொடர்பான பொருட்களின் பட்டியலை வழங்குகிறது.

பூடான் தொழில், வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளர் திருமிகு தாஷி வாங்மோ

பூடானுக்கான இந்தியத் தூதர் திரு.சுதாகர் தலேடா

2

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம், பூடான் உணவு மற்றும் மருந்து ஆணையத்தின் அதிகாரப்பூர்வ கட்டுப்பாட்டை அங்கீகரிப்பதற்கான ஒப்பந்தம்.

வர்த்தகம் செய்வதை எளிதாக்குவதை ஊக்குவிப்பதன் மூலமும், இரு தரப்பிலும் இணக்க செலவைக் குறைப்பதன் மூலமும் இந்தியா மற்றும் பூடான் இடையேயான வர்த்தகத்தை இந்த ஒப்பந்தம் எளிதாக்கும்.

பூடான் சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் திரு.பெம்பா வாங்சுக்

பூடானுக்கான இந்தியத் தூதர் திரு.சுதாகர் தலேடா.

3

எரிசக்தி திறன் மற்றும் எரிசக்தி சேமிப்பு நடவடிக்கைகள் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

பூடானின் எரிசக்தி திறனை ஊக்குவிக்கிறது.

பூடான் பொருளாதாரம் மற்றும் இயற்கை வள அமைச்சகத்தின் செயலாளர் திரு.கர்மா ஷெரிங்

பூடானுக்கான இந்தியத் தூதர் திரு.சுதாகர் தலேடா.

4

விளையாட்டு மற்றும் இளைஞர் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இருதரப்பு விளையாட்டு முகமைகளுக்கு இடையே தொடர்புகளை மேம்படுத்தவும், விளையாட்டு நடவடிக்கைகள்/நிகழ்ச்சிகளை நடத்தவும் இந்தியா மற்றும் பூடான் இடையே தொடர்புகளை மேம்படுத்த உதவும்.

பூடான் வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வர்த்தக அமைச்சகத்தின் செயலாளர் திருமிகு பெமா சோடன்

பூடானுக்கான இந்தியத் தூதர் திரு.சுதாகர் தலேடா.

5

தரமான மருந்து தயாரிப்பு மற்றும் கண்காணிப்பை பரிசோதித்தல் தொடர்பான ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நமது நெருங்கிய ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தவும், இரு தரப்பிலும் உள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறை களுக்கு ஏற்ப மருந்துகள் ஒழுங்குமுறை துறையில் தகவல்களை பரிமாறிக் கொள்ளவும் உதவும்.

பூடான் சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் திரு.பெம்பா வாங்சுக்

பூடானுக்கான இந்தியத் தூதர் திரு.சுதாகர் தலேடா.

6

விண்வெளி ஒத்துழைப்புக்கான கூட்டுத் திட்ட நடவடிக்கை

பரிமாற்றத் திட்டங்கள், பயிற்சி போன்றவற்றின் மூலம் நமது விண்வெளி ஒத்துழைப்பை மேலும் வளர்ப்பதற்கான உறுதியான செயல்திட்டத்தை இந்தக் கூட்டு செயல் திட்டம் வழங்குகிறது.

பூடான் அரசு தொழில்நுட்ப முகமை செயலாளர் திரு.ஜிக்மே டென்சிங்

பூடானுக்கான இந்தியத் தூதர் திரு.சுதாகர் தலேடா.

7.

இந்திய தேசிய அறிவு கட்டமைப்பு மற்றும் பூடானின் ட்ருக் ஆராய்ச்சி மற்றும் கல்வி கட்டமைப்பு ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுப்பித்தல்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியாவுக்கும், பூடானுக்கும் இடையே டிஜிட்டல் இணைப்பை மேம்படுத்தவும், பூடானின் ஆராய்ச்சி நிறுவனங்களின் நிபுணர்களுக்கு பயனளிக்கவும் உதவும்.

பூடான் அரசு தொழில்நுட்ப முகமை செயலாளர் திரு.ஜிக்மே டென்சிங்

பூடானுக்கான இந்தியத் தூதர் திரு.சுதாகர் தலேடா.

 

மேலும், இந்தியா மற்றும் பூடான் இடையே ரயில் இணைப்புகளை ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன. கோக்ராஜர்கெலெபு ரயில் இணைப்பு, பனார்ஹட்சம்ட்சே ரயில் இணைப்பு உட்பட இந்தியா மற்றும் பூடான் இடையே இரண்டு முன்மொழியப்பட்ட ரயில் இணைப்புகளை ஏற்படுத்தவும், அவற்றை செயல்படுத்தும் வழிமுறைகளுக்கும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது.

****

PKV/RR/KV



(Release ID: 2016305) Visitor Counter : 36