உள்துறை அமைச்சகம்

மத்திய ஆயுத போலீஸ் படைகளில் (சிஏபிஎஃப்) கான்ஸ்டபிள்களை சேர்ப்பதற்கான கான்ஸ்டபிள் தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்படும்

Posted On: 11 FEB 2024 11:51AM by PIB Chennai

நாடு முழுவதும் 128 நகரங்களில் சுமார் 48 லட்சம் பேருக்கு 2024 பிப்ரவரி 20 முதல் மார்ச் 7 வரை தேர்வு நடத்தப்படும்

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் வழிகாட்டுதலின் கீழ், 2024 ஜனவரி 01 முதல் இந்தி மற்றும் ஆங்கிலத்துடன் கூடுதலாக 13 பிராந்திய மொழிகளில் கான்ஸ்டபிள்  தேர்வை நடத்த உள்துறை அமைச்சகம் முடிவு செய்திருந்தது

மத்திய ஆயுத போலீஸ் படைகளில் உள்ளூர் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்கவும், பிராந்திய மொழிகளை ஊக்குவிக்கவும் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் முன்முயற்சியின் பேரில் இந்த வரலாற்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது

கான்ஸ்டபிள்  தேர்வு வினாத்தாள்கள் இப்போது இந்தி மற்றும் ஆங்கிலத்துடன் கூடுதலாக அசாமி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஒடியா, உருது, பஞ்சாபி, மணிப்புரி மற்றும் கொங்கனி மொழிகளில் தயாரிக்கப்படும்

நாடு முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான இளைஞர்களை ஈர்க்கும் பணியாளர் தேர்வு ஆணையம் (எஸ்.எஸ்.சி) நடத்தும் முக்கிய தேர்வுகளில் கான்ஸ்டபிள்  தேர்வும் ஒன்றாகும்

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவின் மூலம், நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்கள் தாய்மொழி / பிராந்திய மொழியில் இந்தத் தேர்வில் பங்கேற்க முடியும், இது அவர்களின் தேர்வு வாய்ப்புகளை அதிகரிக்கும்.

மத்திய அரசின் இந்த முன்முயற்சியின் மூலம், நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள், சிஏபிஎஃப் இன் கான்ஸ்டபிள்  தேர்வில் தங்கள் தாய்மொழியில் பங்கேற்கவும், தேச சேவையில் ஒரு வாழ்க்கையை உருவாக்கவும் ஒரு பொன்னான வாய்ப்பைப் பெற்றுள்ளனர்

*******

ANU/AD/PKV/DL



(Release ID: 2004969) Visitor Counter : 403