நிதி அமைச்சகம்
மாதந்தோறும் 300 யூனிட் வரை இலவசமாக மின்சாரம் பெற ஒரு கோடி வீடுகளுக்கு மேற்கூரை சூரியசக்தி மின்மயமாக்கல் திட்டம்
Posted On:
01 FEB 2024 12:47PM by PIB Chennai
2024-2025-ம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தபோது, பசுமை வளர்ச்சி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிப்பதற்கான பல நடவடிக்கைகளை மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அறிவித்தார். மேலும் சில அறிவிப்புகள்:
மேற்கூரை சூரியசக்திப் பயன்பாடு
மேற்கூரை சூரிய சக்தி மின்மயமாக்கல் திட்டம் மூலம், ஒரு கோடி வீடுகள் ஒவ்வொரு மாதமும் 300 யூனிட்வரை இலவச மின்சாரத்தைப் பெற முடியும் என்று நிதியமைச்சர் கூறினார். அயோத்தியில் ராமர் பிரதிஷ்டை நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில் பிரதமரின் தீர்மானத்தைத் தொடர்ந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இலவச சூரிய ஒளி மின்சாரம் மூலம் வீடுகளுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 முதல் ரூ.18,000 வரை சேமிப்பு மற்றும் உபரி மின்சாரத்தை மின்விநியோக நிறுவனங்களுக்கு விற்பனை செய்தல்.
மின்சார வாகனங்களுக்கு மின்னேற்றம் செய்வது;
சூரிய ஒளி மின்சாரம் நிறுவுதல் மற்றும் வழங்கலுக்கான அதிக எண்ணிக்கையில் விற்பனையாளர்களுக்கான தொழில்முனைவோர் வாய்ப்புகள்.
சூரிய சக்தி மின்உற்பத்தி நிறுவல், பராமரிப்பு ஆகியவற்றில் தொழில்நுட்பத் திறன்களைக் கொண்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள்.
பசுமை ஆற்றல்
2070 க்குள் 'நிகர பூஜ்ஜியம்' என்ற உறுதிப்பாட்டைப் பூர்த்தி செய்யும் நோக்கத்துடன், திருமதி சீதாராமன் 2024-25 இடைக்கால பட்ஜெட்டில் நடவடிக்கைகளை முன்மொழிந்துள்ளார்.
ஒரு கிகாவாட் ஆரம்ப திறனுக்கு கடல் காற்றாலை ஆற்றலைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறு இடைவெளிக்கான நிதி வழங்கப்படும்.
நிலக்கரி வாயுவாக்கம் மற்றும் திரவமாக்குதல் திறன் 100 மெட்ரிக் டன் 2030-க்குள் அமைக்கப்படும். இது இயற்கை எரிவாயு, மெத்தனால், அம்மோனியா ஆகியவற்றின் இறக்குமதியைக் குறைக்கவும் உதவும்.
அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவில் அழுத்தப்பட்ட உயிரி எரிவாயுவை போக்குவரத்துக்கான மற்றும் வீட்டு உபயோகங்களுக்கான குழாய்வழி இயற்கை எரிவாயுவில் படிப்படியாகக் கலப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
தாவர எரிசக்தி சேகரிப்பு இயந்திரங்களைக் கொள்முதல் செய்ய நிதி உதவி வழங்குதல்.
----
(Release ID: 2001110)
ANU/SMB/BS/KPG/KRS
(Release ID: 2001530)
Visitor Counter : 184
Read this release in:
Bengali
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam