நிதி அமைச்சகம்
வாடகை வீடுகள், குடிசைப் பகுதிகள், வீடுகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தின் தகுதியான பிரிவினர் தங்கள் சொந்த வீடுகளை வாங்க அல்லது வீடுகட்ட உதவும் திட்டத்தை அரசு தொடங்க உள்ளது
प्रविष्टि तिथि:
01 FEB 2024 12:48PM by PIB Chennai
2024-25-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், வாடகை வீடுகள், குடிசைப் பகுதிகள், குடியிருப்புகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தின் தகுதியான பிரிவினர் தங்களுக்கு சொந்தமாக வீடு வாங்க அல்லது வீடுகட்டிக்கொள்ள உதவும் திட்டத்தை அரசு தொடங்கும் என்று அறிவித்தார்
கிராமப் பகுதிகளுக்கான பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் குறித்த சாதனையை எடுத்துரைத்த மத்திய நிதியமைச்சர், கொவிட் நோய்த்தொற்று காரணமாக சவால்கள் இருந்தபோதிலும், திட்டத்தை செயல்படுத்துவது தொடர்ந்து மூன்று கோடி வீடுகள் என்ற இலக்கு அடையப்பட உள்ளது என்றார். குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் எழும் தேவையைப் பூர்த்தி செய்ய அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் இரண்டு கோடி வீடுகள் கட்டப்படும் என்றும் அவர் கூறினார்.
2047-ம் ஆண்டுக்குள் நாட்டை 'வளர்ச்சியடைந்த பாரதமாக’ மாற்றும் வகையில், அனைத்து வகையான, அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையுடன் அரசு செயல்பட்டு வருவதாக திருமதி நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
----
(Release ID: 2001112)
ANU/SMB/BS/KPG/KRS
(रिलीज़ आईडी: 2001523)
आगंतुक पटल : 173
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Marathi
,
English
,
Urdu
,
हिन्दी
,
Nepali
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam