நிதி அமைச்சகம்
வறுமையை ஒழிக்க, அனைவரும் இணைவோம் என்ற உறுதியின் மூலம் ஏழைகளுக்கு அரசு அதிகாரம் அளிக்கிறது: மத்திய நிதியமைச்சர்
Posted On:
01 FEB 2024 12:38PM by PIB Chennai
ஏழைகளின் நலனே, நாட்டின் நலன் என்று குறிப்பிட்ட மத்திய நிதி, பெரு நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பதில் அரசு நம்பிக்கை கொண்டுள்ளது என்று கூறினார்.
இடைக்கால மத்திய பட்ஜெட் 2024-ஐ இன்று தாக்கல் செய்த திருமதி சீதாராமன், "உரிமைகளின் மூலம் வறுமையைக் கையாள்வதற்கான முந்தைய அணுகுமுறை மிகவும் மிதமான விளைவுகளை விளைவித்தது. வளர்ச்சி செயல்பாட்டில் ஏழைகள் அதிகாரம் பெற்ற கூட்டாளிகளாக மாறும்போது, அவர்களுக்கு உதவுவதற்கான அரசின் சக்தியும் பல மடங்கு அதிகரிக்கிறது” என்று கூறினார்.
அனைவரும் இணைவோம் என்ற உறுதியில் கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு நிலையிலான வறுமையிலிருந்து விடுபட 25 கோடி மக்களுக்கு அரசு உதவி செய்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் கூறினார்.
பிரதமரின் அனைவருக்கும் வங்கி கணக்குகள் திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு ரூ.34 லட்சம் கோடியை 'நேரடிப் பயன் பரிமாற்றம்' மூலம் செலுத்தியதன் வாயிலாக அரசுக்கு ரூ.2.7 லட்சம் கோடி சேமிக்கப்பட்டுள்ளது என்றும், முன்பு நிலவிய முறைகேடுகளைத் தவிர்ப்பதன் மூலம் இது சாத்தியமானது என்றும் திருமதி நிர்மலா சீதாராமன் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2001089
***
ANU/SMB/IR/AG/RR
(Release ID: 2001396)
Visitor Counter : 152
Read this release in:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Malayalam