மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தனித்துவ கலந்துரையாடல் நிகழ்ச்சியான தேர்வு குறித்த உரையாடல் 2024 குறித்து டாக்டர் சுபாஷ் சர்க்கார் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார்

Posted On: 28 JAN 2024 7:00PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தனித்துவ கலந்துரையாடல் நிகழ்ச்சியான தேர்வு குறித்த உரையாடல் குறித்து கல்வி இணைமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். இதில் நாடு முழுவதும் உள்ள மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவருடன் கலந்துரையாடி வாழ்க்கையை விழாவாகக் கொண்டாடத் தேர்வுகளால் ஏற்படும் மன அழுத்தத்தை சமாளிக்க விவாதித்தனர்.

கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையால் கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த நிகழ்வு வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்று டாக்டர் சர்க்கார் கூறினார். இதன் முதல் மூன்று நிகழ்வுகள் புதுதில்லி டவுன்-ஹாலில் நடைபெற்றன. கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக, நான்காவது நிகழ்வு தூர்தர்ஷன் மற்றும் அனைத்து முக்கிய தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் ஒளிபரப்பப்பட்டது. ஐந்தாவது மற்றும் ஆறாவது நிகழ்வு புதுதில்லியின் தல்கதோரா விளையாட்டரங்கில் நடைபெற்றது என்றும் அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு (2023) நடந்த நிகழ்வில் ஏறத்தாழ 31.24 லட்சம் மாணவர்கள், 5.60 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் 1.95 லட்சம் பெற்றோர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

தேர்வு குறித்த உரையாடலின் 7-வது நிகழ்வுக்கு மைகவ் இணையதளத்தில் 2.26 கோடி பேர் பதிவு செய்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். இந்த தனித்துவமான நிகழ்வில் பங்கேற்கவும், பிரதமருடன் கலந்துரையாடவும் நாடு முழுவதும் உள்ள மாணவர்களிடையே உள்ள விரிவான உற்சாகத்தை இது காட்டுகிறது என்று அவர் கூறினார்.

இந்த ஆண்டு தேர்வு குறித்த உரையாடல்  ஜனவரி 29 அன்று காலை 11 மணி முதல் புதுதில்லி, பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் என்று டாக்டர் சர்க்கார் கூறினார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 3000 பங்கேற்பாளர்கள் பிரதமருடன் கலந்துரையாட உள்ளனர்.

ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்தும் இரண்டு மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் மற்றும் கலா உத்சவ் வெற்றியாளர்கள் முக்கிய நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளைச் சேர்ந்த நூறு மாணவர்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள், தொடங்கப்பட்டதிலிருந்து முதல் முறையாக இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர்.

போட்டியில் பங்கேற்க, மைகவ் போர்ட்டலில் 11 டிசம்பர் 2023 முதல் 12 ஜனவரி 2024 வரை 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்காக ஆன்லைன் போட்டி நடத்தப்பட்டது என்று அவர் கூறினார். மைகவ் வலைதளத்தில் கேட்கப்பட்ட கேள்விகளின் அடிப்படையில் பங்கேற்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்குப் பிரதமர் எழுதிய எக்ஸாம் வாரியர்ஸ் புத்தகம் மற்றும் சான்றிதழை உள்ளடக்கிய சிறப்பு தேர்வு குறித்த உரையாடலில்  வழங்கப்படும்.

இளைஞர்களுக்கு மன அழுத்தமில்லாத சூழ்நிலையை உருவாக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான 'எக்ஸாம் வாரியர்ஸ்' என்ற பெரிய இயக்கத்தின் ஒரு பகுதியாக தேர்வு குறித்த உரையாடல்  உள்ளது என்றும் அவர் கூறினார்.

மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமுதாயத்தை ஒன்றிணைத்து, ஒவ்வொரு குழந்தையின் தனித்துவம் கொண்டாடப்பட்டு, ஊக்குவிக்கப்பட்டு, தன்னை முழுமையாக வெளிப்படுத்த அனுமதிக்கப்படும் சூழலை உருவாக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் முயற்சியால் ஆனது இந்த இயக்கம் என்று அவர் கூறினார்.

இதைக் கருத்தில் கொண்டு, 2024 ஜனவரி 12 ஆம் தேதி அதாவது இளைஞர் தினம் தொடங்கி, 2024 ஜனவரி 23 வரை, பள்ளி மட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நடவடிக்கைகளில் இதில் மாரத்தான் ஓட்டம், இசைப் போட்டி, மீம்ஸ் போட்டி, நூக்கட் நாடகம், மாணவர்-தொகுப்பாளர்-மாணவர்-விருந்தினர் கலந்துரையாடல்கள் போன்றவை அடங்கும்.

2024 ஜனவரி 23 அன்று நாடு முழுவதும் 774 மாவட்டங்களில் உள்ள 657 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மற்றும் 122 நவோதயா வித்யாலயா பள்ளிகளில் நாடு தழுவிய ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. பிரதமர் திரு நரேந்திர மோடி எழுதிய 'எக்ஸாம் வாரியர்ஸ்' புத்தகத்தின் தேர்வுக் குறிப்புகளை மையமாக வைத்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்களும் ஆசிரியர்களும் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் ஓவியப் போட்டியில் பங்கேற்றனர்.

 

***

(Release ID: 2000440)



(Release ID: 2000832) Visitor Counter : 60