பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

லட்சத்தீவில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்

Posted On: 03 JAN 2024 1:49PM by PIB Chennai

லட்சத்தீவுகளில் மத்திய அரசின் பல்வேறு நலத் திட்டங்களின் பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (03.01.2024) கலந்துரையாடினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில்  பிரதமர் வெளியிட்டுள்ள பதிவு:

‘’லட்சத்தீவில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் பயனாளிகளுடன் உரையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. மகளிர் சுய உதவிக் குழுவினர் தங்கள்  குழுவின் மூலம் உணவகம் தொடங்கியிருப்பதையும் அதன் செயல்பாடுகள் குறித்தும் அதன் மூலம் தற்சார்பு அடைந்துள்ளது தொடர்பாகவும் விரிவாகப் பேசினர்.  வயது முதிர்ந்த ஒரு நபர் தமது இதயநோய் சிகிச்சைக்கு  ஆயுஷ்மான் பாரத்  திட்டம் எவ்வாறு உதவியது என்பதை விளக்கினார். பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதியுதவித் திட்டத்தின் கீழ் தாம் பயனடைந்திருப்பது குறித்தும் அது தமது வாழ்க்கயை எவ்வாறு மாற்றியது என்பது பற்றியும் பெண் விவசாயி ஒருவர் அவரது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். மற்றும் பலர் இலவச உணவு தானிய திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள், பிரதமரின் வீட்டு வசதித் திட்டம், கிசான் கடன் அட்டைத் திட்டம், இலவச சமையல் எரிவாயு திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களின் மூலம் அவர்கள் எவ்வாறு பயனடைந்தனர் என்பதைப் பற்றிப் பேசினர்.  வளர்ச்சியின் பலன்கள் மிகவும் தொலைதூரப் பகுதிகளில் கூட  அனைத்துத் தரப்பு மக்களையும்   சென்றடைவதைப்  பார்ப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது."

** 

(Release ID: 1992670)

ANU/PKV/PLM/KPG/RR


(Release ID: 1992712) Visitor Counter : 139