பிரதமர் அலுவலகம்
பத்தாண்டுகளுக்கு முன்பு பலவீனமான ஐந்து நாடுகளில் ஒன்றாக இருந்த இந்தியா, ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியிருப்பது, உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது: பிரதமர்
प्रविष्टि तिथि:
21 DEC 2023 8:52PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி ஃபைனான்சியல் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியைப் பகிர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"ஃபைனான்சியல் டைம்ஸ் @FT உடனான இந்த விரிவான நேர்காணலின்போது, பரந்த அளவில் உள்ளூர் மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து நான் பேசினேன்.
on.ft.com/3NDFBiR
இந்தியாவின் வளர்ச்சிப் பணிகள், இந்தியா எவ்வாறு சாதனை வேகத்தில் வளர்ந்து வருகிறது, புத்தொழில் நிறுவனங்களின் அபரிமிதமான வளர்ச்சி, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தனித்துவமான மக்கள் இயக்கங்கள் மற்றும் பலவற்றைப் பற்றி நான் பேசினேன். ஒரு தசாப்தத்திற்கு முன் 'பலவீனமான ஐந்து' நாடுகளில் ஒன்றாக இருந்த இந்தியா, ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியிருப்பது, உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியா நம்பிக்கையின் ஒளியாகவும், உலகளாவிய செழிப்பை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய பங்குதாரராகவும் பார்க்கப்படுகிறது.”
***
(Release ID: 1989429)
ANU/SMB/BR/RR
(रिलीज़ आईडी: 1989487)
आगंतुक पटल : 140
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam