பிரதமர் அலுவலகம்
'வளர்ச்சியடைந்த பாரதம் @ 2047: இளைஞர்களின் குரல்' நிகழ்ச்சியில் இணையுமாறு பிரதமர் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்
'வளர்ச்சியடைந்த பாரதம் @ 2047: இளைஞர்களின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுகிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
11 DEC 2023 10:05AM by PIB Chennai
வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க நமது இளைஞர்களை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்ட ‘வளர்ச்சியடைந்த இந்தியா @ 2047: இளைஞர்களின் குரல்' முன்முயற்சியில் சேருமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற நமது கனவை நனவாக்க இந்தியாவின் இளைஞர் சக்தி மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதாக திரு மோடி கூறியுள்ளார்.
இன்று காலை 10.30 மணிக்கு அவர் உரையாற்றுகிறார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் பதிவில் அவர் கூறியிருப்பதாவது;
"வளர்ச்சியடைந்த இந்தியா” என்ற நமது கனவை நனவாக்க இந்தியாவின் இளையோர் சக்தி மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. இன்று காலை 10.30 மணிக்கு, வளர்ந்த இந்தியாவை உருவாக்க நமது இளைஞர்களை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்ட ‘வளர்ச்சியடைந்த இந்தியா @ 2047 : இளைஞர்களின் குரல்' முன்முயற்சியில் உரையாற்றுகிறேன். இதில் அனைவரும் திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
***
ANU/SMB/IR/RS/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 1984914)
வருகையாளர் எண்ணிக்கை : 450
இந்த வெளியீட்டை படிக்க:
Marathi
,
Telugu
,
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Malayalam