பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நீதிபதி எம்.பாத்திமா பீவி மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

Posted On: 24 NOV 2023 10:55AM by PIB Chennai

நீதிபதி எம்.பாத்திமா பீவி மறைவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது;

"நீதிபதி எம்.பாத்திமா பீவியின் மறைவு வருத்தமளிக்கிறது. ஓர் உண்மை முன்னோடியான அவரது சிறப்புமிக்கப் பயணம் பல தடைகளைத் தகர்த்து பெண்களுக்குப் பெரிதும் உத்வேகம் அளித்தது. சட்டத்துறையில் அவரது பங்களிப்பு போற்றத்தக்கது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இரங்கல். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்: பிரதமர் நரேந்திர மோடி @narendramodi”

 

***



ANU/SMB/PKV/RR/KPG

 


(Release ID: 1979343) Visitor Counter : 125