பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

15-வது ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்பட்டப் போட்டியில் இந்திய அணியின் அபாரமான செயல்திறனைப் பிரதமர் பாராட்டியுள்ளார்

Posted On: 02 NOV 2023 9:25PM by PIB Chennai


15-வது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்பட்டப் போட்டியில் 55 பதக்கங்களை  வென்ற இந்திய அணிக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"   பிரமிக்கவைக்கும்  சாதனை! 

15-வது ஆசிய சாம்பியன்பட்டப் போட்டியில்  @Asian_Shooting  சிறப்பாக செயல்பட்ட நமது துப்பாக்கிச்  சுடும் வீரர்களுக்கு வாழ்த்துக்கள். 

21 தங்கம் உட்பட 55 பதக்கங்களை வென்றுள்ளதுடன், @Paris2024 க்கு, பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு 6 தகுதிகளையும் பெற்றுள்ளனர். 

அவர்களின் திறமை, உறுதி, விடாமுயற்சி ஆகியவை உண்மையிலேயே தேசத்திற்குப்  பெருமை சேர்த்துள்ளன.’’ 
******  

ANU/SMB/PKV/KV

 


(Release ID: 1974387) Visitor Counter : 104