பிரதமர் அலுவலகம்

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் கலப்பு 50 மீட்டர் ரைபிள்ஸ் புரோன் எஸ்.எச் -1 போட்டியில் சித்தார்த்த பாபு தங்கப் பதக்கம் வென்றதற்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 26 OCT 2023 11:48AM by PIB Chennai

சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் கலப்பு 50 மீட்டர் ரைபிள்ஸ் ப்ரோன் எஸ்.எச்-1 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற சித்தார்த்த பாபுவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"கலப்பு 50 மீட்டர் ரைபிள்ஸ் ப்ரோன் எஸ்.எச் -1 போட்டியில் பிரமிக்க வைக்கும் செயல்திறனுக்காக நமது பாரா துப்பாக்கி சுடுதல் வீரர் சித்தார்த்த பாபுவுக்கு வாழ்த்துகள்!

அவரது இடைவிடாத துல்லியம், கவனம், அசாதாரண திறமைக்கு இந்தத் தங்கம் ஒரு சான்றாகும். இந்தியா மகிழ்ச்சி அடைந்துள்ளது.

***

ANU/SMB/PKV/AG/KPG

 

 

 



(Release ID: 1971499) Visitor Counter : 80