பிரதமர் அலுவலகம்

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி 2022-ன் கலப்பு 50 மீட்டர் ரைஃபிள் எஸ்.எச் 1 பிரிவில் ருத்ரன்ஷ் கண்டேல்வால் வெள்ளிப் பதக்கம் வென்றதை பிரதமர் கொண்டாடினார்

Posted On: 23 OCT 2023 5:43PM by PIB Chennai

சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும்  ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி 2022-ல் கலப்பு 50 மீட்டர் ரைபிள் எஸ்.எச்.1 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ருத்ரான்ஷ் கண்டேல்வாலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

 

"கலப்பு 50 மீட்டர் ரைபிள் எஸ்.எச் 1 போட்டியில் சிறப்புமிக்க வெள்ளிப் பதக்கம் வென்ற ருத்ரன்ஷ் கண்டேல்வாலுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அவரது அர்ப்பணிப்பு மற்றும் திறமை உண்மையிலேயே பாராட்டத்தக்கது. ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்களுக்கு இது ஒரு குறியீடாக அமைகிறது. அவரது சாதனையால் இந்தியா பெருமிதம் கொள்கிறது.

***

(Release ID: 1970140)
ANU/AD/IR/RS/KRS



(Release ID: 1970215) Visitor Counter : 76