பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மனதின் குரல் நிகழ்ச்சி குறித்து பலர் விரிவான ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர், தங்கள் கண்டுபிடிப்புகளை மக்களுடன் பகிர்ந்து கொண்டனர்: பிரதமர் திரு நரேந்திரமோடி

இடுகை இடப்பட்ட நாள்: 21 OCT 2023 5:26PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி, தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மனதின் குரல் நிகழ்ச்சி குறித்து பலர் விரிவான ஆராய்ச்சிகளை மேற்கொண்டது குறித்தும், அவர்களின் நுண்ணறிவுமிக்க கண்டுபிடிப்புகளை மக்களுடன் பகிர்ந்து கொண்டது குறித்தும் இன்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

மனதின் குரல் நிகழ்ச்சி எவ்வாறு சமூக மாற்றத்திற்கான ஒரு வழிமுறையாக மாறியது என்பதை விவரிக்கும் 'கூட்டு முயற்சி நற்குணத்தை தூண்டும்' என்ற புத்தகத்தைப் பற்றி அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"பல ஆண்டுகளாக மனதின் குரல் நிகழ்ச்சி குறித்து விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டு, தங்கள் நுண்ணறிவு கண்டுபிடிப்புகளை மக்களுடன் பகிர்ந்து கொண்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ப்ளூகிராஃப்ட் டிஜிட்டல் ஃபவுண்டேஷனின் 'கூட்டு முயற்சி நற்குணத்தைத் தூண்டும்' என்ற புத்தகம் அத்தகைய மற்றொரு முயற்சியாகும்.

இது, இந்த திட்டம் எவ்வாறு சமூக மாற்றத்திற்கான ஒரு வழிமுறையாக மாறியுள்ளது என்பதை விவரிக்கிறது. இந்த பணிக்காக அவர்களுக்கு வாழ்த்துக்கள். mkb100book.in"

***

ANU/AD/BS/DL


(வெளியீட்டு அடையாள எண்: 1969798) வருகையாளர் எண்ணிக்கை : 167