பிரதமர் அலுவலகம்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2022 மகளிர் வில்வித்தை குழு பிரிவில் தங்கப் பதக்கம் வென்றதைப் பிரதமர் கொண்டாடியுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
05 OCT 2023 11:21AM by PIB Chennai
ஹாங்சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டி 2022 மகளிர் வில்வித்தை குழு பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற ஜோதி சுரேகா வென்னம், பர்னீத் கவுர், அதிதி கோபிசந்த் ஆகியோருக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“குழுப்பிரிவில் இந்திய மகளிர் வில்வித்தை வீராங்கனைகள் தங்கப்பதக்கம் வென்றனர். ஜோதி சுரேகா வென்னம், பர்னீத் கவுர், அதிதி கோபிசந்த் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்! அவர்களின் இணையற்ற செயல்திறன், கவனம், அர்ப்பணிப்பு ஆகியவை நம் நாட்டை மிகவும் பெருமைப்படுத்தியுள்ளன. இந்த வெற்றி அவர்களின் சிறந்த திறமை மற்றும் குழு உழைப்புக்கு ஒரு சான்றாகும்.”
***
SMB/ANU/IR/RS/KV
(வெளியீட்டு அடையாள எண்: 1964565)
வருகையாளர் எண்ணிக்கை : 184
இந்த வெளியீட்டை படிக்க:
Punjabi
,
Kannada
,
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Telugu