பிரதமர் அலுவலகம்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் பாராட்டு
இடுகை இடப்பட்ட நாள்:
03 OCT 2023 8:31AM by PIB Chennai
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற முகமது அஜ்மல், வித்யா ராம்ராஜ், ராஜேஷ் ரமேஷ் மற்றும் வெங்கடேசன் சுபா ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் திரு.நரேந்திரமோடி வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் பதிவில், “ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 4 x 400மீ கலப்பு தொடர் ஓட்டப் போட்டியில் நமது விளையாட்டு வீரர்கள் அற்புதமாக விளையாடி வென்றுள்ளனர்.
இந்த அற்புதமான வெற்றியைப் பெற்ற முகமது அஜ்மல், வித்யா ராம்ராஜ், ராஜேஷ் ரமேஷ் மற்றும் வெங்கடேசன் சுபா ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்! அவர்களின் குழுப்பணி சிறப்பாக இருந்தது," என்று கூறியுள்ளார்.
***
ANU/SRI/BS/AG/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 1963558)
வருகையாளர் எண்ணிக்கை : 183
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam