பிரதமர் அலுவலகம்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்2022-ல் ஆடவருக்கான ஸ்பீட் ஸ்கேட்டிங் 3000 மீட்டர் ரிலே பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றதைப் பிரதமர் கொண்டாடினார்
இடுகை இடப்பட்ட நாள்:
02 OCT 2023 12:25PM by PIB Chennai
ஹாங்சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவர் ஸ்பீட் ஸ்கேட்டிங் 3000 மீட்டர் ரிலே பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ஆனந்த்குமார் வேல்குமார், சித்தாந்த் ராகுல் காம்ப்ளே, விக்ரம் ராஜேந்திர இங்கலே ஆகியோருக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"அணிச்செயல்பாட்டின் வியத்தகு வெளிப்பாடு மற்றொரு வெண்கலப் பதக்கத்தை நாட்ற்குக் கொண்டு வருகிறது!
ஆடவர் ஸ்பீட் ஸ்கேட்டிங் 3000 மீட்டர் ரிலே பிரிவில் ஆனந்தகுமார் வேல்குமார், சித்தாந்த் ராகுல் காம்ப்ளே, விக்ரம் ராஜேந்திர இங்கலே ஆகியோர் வெண்கலம் வென்றனர்.
இந்தச் சாதனையால் இந்தியா மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது, பெருமிதம் கொள்கிறது."
***
ANU/AD/SMB/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1963328)
வருகையாளர் எண்ணிக்கை : 146
இந்த வெளியீட்டை படிக்க:
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam