பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தூய்மைப் பணியில் பிரதமர் பங்கேற்பு


இந்த முயற்சியில் பிரதமருடன் அங்கித் பையான்பூரியாவும் இணைந்தார்

प्रविष्टि तिथि: 01 OCT 2023 2:31PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் அறைகூவலின் பேரில் இன்று நாடு முழுவதும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒவ்வொருவரும் ஒரு மணி நேரத்தை தூய்மைக்காக ஒதுக்கியுள்ளனர், இது நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க உதவும்.

பிரதமர் திரு. நரேந்திர மோடி, அங்கித் பையான்பூரியாவுடன் இணைந்து இந்த தூய்மைப் பணியில் பங்கேற்றார். அங்கித் ஒரு உடற்தகுதி நிபுணராவார்.

 

பிரதமர் தனது எக்ஸ் இடுகையில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார், அதில் அவர் நமது அன்றாட வாழ்க்கையில் தூய்மை மற்றும் உடற்தகுதியின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசுவதைக் காணலாம். பிரதமர் தனது அன்றாட வாழ்க்கை வழக்கத்தைப் பற்றியும் பேசினார், மேலும் அங்கித்தின் உடற்தகுதி பற்றி கேட்டார்.

ஒரு எக்ஸ் சமூக ஊடகப் பதிவில், பிரதமர் கூறியிருப்பதாவது;

"தேசம் இன்று, தூய்மையில் கவனம் செலுத்தும்போது, நானும் அங்கித் பையான்பூரியாவும் அதையே மேற்கொண்டோம்! தூய்மையைத் தாண்டி, உடற்தகுதி மற்றும் நல்வாழ்வில் கலந்தோம். இது அனைத்தும் தூய்மை மற்றும் தூய்மை இந்தியாவின் உத்வேகத்தைப் பற்றியது! @baiyanpuria"

***

ANU/AP/PKV/DL


(रिलीज़ आईडी: 1962733) आगंतुक पटल : 176
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam