பிரதமர் அலுவலகம்

ஜி 20 பல்கலைக்கழக இணைப்பு இறுதிப் போட்டியில் பங்கேற்க இளைஞர்களுக்கு பிரதமர் அழைப்பு

Posted On: 24 SEP 2023 8:43PM by PIB Chennai

26-ம் தேதி நடைபெறும் ஜி20 பல்கலைக்கழக இணைப்பு இறுதிப்போட்டியில் பங்கேற்குமாறு இளைஞர்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

 

"ஜி 20 பல்கலைக்கழக இணைப்பு - எங்கள் இளைஞர் சக்தியை ஊக்குவித்தல்" என்ற தலைப்பில் லிங்க்ட்இன் இடுகையையும் அவர் பகிர்ந்துள்ளார்.

 

இது குறித்து  எக்ஸ் வலைதளப் பதிவில் கருத்துத் தெரிவித்துள்ள திரு மோடி,

"என் இளம் நண்பர்களே, இம்மாதம் 26-ம் தேதி நடைபெறும் ஜி20 பல்கலைக்கழக இணைப்பு இறுதிப் போட்டியில் நீங்கள் பங்கேற்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

 

கடந்த ஆண்டில், ஜி 20 பல்கலைக்கழக இணைப்பு இந்தியாவின் ஜி -20 தலைமை பதவிக்கான  முன்னுரிமை பகுதிகளை முன்னிலைப்படுத்த ஒரு சிறந்த மன்றமாக திகழ்ந்தது.

 

பல்வேறு பிரச்னைகள் குறித்த சிந்தனைகள் பற்றிய துடிப்பான பரிமாற்றத்தை நான் எதிர்நோக்குகிறேன், என்று குறிப்பிட்டுள்ளார்.

 

பிரதமர் திரு.மோடி பகிர்ந்துள்ள இணையதள இணைப்பு;

https://www.linkedin.com/pulse/g20-university-connect-encouraging-our-yuva-shakti-narendra-modi/?published=t. "

*** 

SM/ANU/BS/KRS



(Release ID: 1960226) Visitor Counter : 92