பிரதமர் அலுவலகம்

பிரிட்ஜ்வாட்டர்அசோசியேட்ஸ் நிறுவனத்தின் இணை-நிறுவனர் திரு ராய் டாலியோ-வுடன் பிரதமர் சந்திப்பு

Posted On: 21 JUN 2023 8:28AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, அமெரிக்காவின் முன்னணி முதலீட்டாளரும் பிரிட்ஜ்வாட்டர் அசோசியேட்ஸ் எனப்படும் நிதி மேலாண்மை நிறுவனத்தின் இணை நிறுவனருமான திரு ராய் டாலியோவை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது, நிதி சார்ந்த புகார்கள் மற்றும் குற்ற நடவடிக்கைகளை சட்டப்பூர்வமாக குறைத்திருப்பது உள்ளிட்ட வேகமான பொருளாதார வளர்ச்சிக்கான மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி எடுத்துரைத்தார்.  மேலும் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வருமாறு திரு டாலியோ-விற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

***

(Release ID: 1933801)

SM/ES/RJ/KRS



(Release ID: 1934034) Visitor Counter : 88