பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பல்வேறு யோகாசனங்களின் வீடியோக்களை பிரதமர் பகிர்ந்துள்ளார்

Posted On: 16 JUN 2023 12:24PM by PIB Chennai

யோகப்பயிற்சி அளிக்கும் அளப்பரிய பலன்களை விளக்கும் வகையில் பிரதமர் திரு நரேந்திர மோடி பல்வேறு யோகாசனங்களின் வீடியோக்களை பகிர்ந்துள்ளார். 

இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: 

“யோகப்பயிற்சி, உடலுக்கும், மனதுக்கும் வலிமை, அமைதி ஆகியவற்றை அளிக்கிறது.   யோகப்பயிற்சியை நம் வாழ்வின் ஒரு அங்கமாக மாற்றிக் கொள்வதன் மூலம், அமைதியான மற்றும் ஆரோக்கியமான வாழ்வை வாழ முடியும். எனவே பல்வேறு யோகப்பயிற்சி சார்ந்த வீடியோக்களை பகிர்ந்திருக்கிறேன்.”

***

(Release ID: 1932807)

AP/ES/RJ/KRS


(Release ID: 1932882) Visitor Counter : 148