பிரதமர் அலுவலகம்
இந்திய உணவு வகைகளை தனது மனைவியுடன் ருசிக்கும் காட்சிகளை காணொலியாக வெளியிட்டு, இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் திரு ஹிரோஷி சுசுகி காரமான உணவு வகைகளை உண்பதில் தனது மனைவி தன்னை தோற்கடித்து விட்டார் என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
11 JUN 2023 11:31AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தியாவுக்கான ஜப்பானிய தூதர் திரு ஹிரோஷி சுசுகியின் காணொலியைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் தனது மனைவியுடன் இந்திய உணவு வகைகளை ருசிப்பதைக் காணலாம்.
இந்தியாவுக்கான ஜப்பானிய தூதர் திரு ஹிரோஷி சுஸுகியின் ட்வீட்டைப் பகிர்ந்து பிரதமர் கூறியிருப்பதாவது:
"மதிப்பிற்குரிய தூதர் அவர்களே, நீங்கள் இதில் தோல்வியடைவதைப் பொருட்படுத்த மாட்டீர்கள் என்று எண்ணுகிறேன். இந்தியாவின் உணவு வகைகளின் பன்முகத்தன்மையை நீங்கள் ரசித்து அதை புதுமையான முறையில் காணொலியாக வழங்கியதைப் பார்ப்பதில் மகிழ்ச்சி. வீடியோக்கள் தொடர்ந்து வரட்டும்!”
***
SM/PKV/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1931440)
வருகையாளர் எண்ணிக்கை : 237
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam