பிரதமர் அலுவலகம்
20 வயதுக்குட்பட்டோருக்கான 20-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பாகத் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களுக்கு பிரதமர் பாராட்டு
இடுகை இடப்பட்ட நாள்:
09 JUN 2023 8:05PM by PIB Chennai
20 வயதுக்குட்பட்டோருக்கான 20-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பாகத் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு:
“நமது வீரர்களை நினைத்துப் பெருமையடைகிறேன்! அவர்கள் 20 வயதுக்குட்பட்டோருக்கான 20-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். 45 நாடுகள் பங்கேற்ற இப்போட்டியில் 6 தங்கம் உட்பட 19 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. நாம் நமது வீரர்களின் வெற்றியைக் கொண்டாடி அவர்களது எதிர்காலச் செயல்பாடுகள் மேலும் மிகச் சிறப்பானதாக அமைவதற்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்”
----.
AP/PLM/KPG/GK
(வெளியீட்டு அடையாள எண்: 1931152)
வருகையாளர் எண்ணிக்கை : 201
இந்த வெளியீட்டை படிக்க:
Telugu
,
Kannada
,
Malayalam
,
Bengali
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia