பிரதமர் அலுவலகம்
குடிமக்களின் குரல் பதிவுடனான புதிய நாடாளுமன்றத்தின் வீடியோவைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
Posted On:
27 MAY 2023 1:46PM by PIB Chennai
பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க குடிமக்கள் தங்களின் எண்ணங்களைத் தெரிவிக்கும் குரல்பதிவுடன் புதிய நாடாளுமன்றத்தின் வீடியோவைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்.
மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரியின் குரல் பதிவுடன் கூடிய வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.
தமது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோக்களை மறு ட்வீட் செய்து, பிரதமர் கூறியிருப்பதாவது:
“#MyParliamentMyPride குறித்து பலர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். மக்களின் விருப்பங்களை மேலும் வீரியத்துடன் நிறைவேற்றுவதற்குத் தொடர்ந்து பாடுபட நமது தேசம் ஒரு புதிய நாடாளுமன்றத்தைப் பெறுகிறது என்ற பெருமித உணர்வை மிகவும் உணர்ச்சிவசப்பட்ட குரல் பதிவுகள் மூலம் அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள்”
“ஜனநாயகத்தின் இந்தக் கோயில் இந்தியாவின் வளர்ச்சிப்பாதையைத் தொடர்ந்து வலுப்படுத்தட்டும்; லட்சக்கணக்கானவர்களுக்கு அதிகாரமளிக்கட்டும். #MyParliamentMyPride”
***
AD/SMB/DL
(Release ID: 1927711)
Visitor Counter : 151
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam