பிரதமர் அலுவலகம்
ஜப்பான், பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் பயணம்
Posted On:
16 MAY 2023 5:00PM by PIB Chennai
ஜப்பானின் தலைமையில் நடைபெறும் G-7 உச்சிமாநாட்டில் பங்கேற்க ஜப்பான் பிரதமர் கிஷிடா ஃபுமியோ அழைப்பின் பேரில், பிரதமர் திரு.நரேந்திர மோடி 2023 மே 19-21-ம் தேதி வரை ஜப்பானின் ஹிரோஷிமாவுக்குச் செல்கிறார். இந்த மாநாட்டின் போது, நட்பு நாடுகளுடன் அமைதி, நிலைத்தன்மை, உணவு பாதுகாப்பு போன்ற பல்வேறு தலைப்புகளில் பிரதமர் பேசுவார்.
பின்னர் பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் பிரதமர் கிஷிடா ஃபுமியோவுடன் இருதரப்பு சந்திப்பை நடத்துவார். பின்னர் பப்புவா நியூ கினியாவில் உள்ள போர்ட் மோர்ஸ்பிக்கு செல்லும் பிரதமர், அங்கு பப்புவா நியூ கினியாவின் பிரதமருடன் இணைந்து இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான மன்றத்தின் (எஃப்ஐபிஐசி III உச்சிமாநாடு) 3-வது உச்சி மாநாட்டை நடத்துவார். இந்தியப் பிரதமர் ஒருவர் பப்புவா நியூ கினியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
அதன்பிறகு, குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டணி அல்பானீஸின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி 2023 மே 22-24-ம் தேதிகளில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குச் செல்கிறார். அங்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் கிஷிடா ஃபுமியோ உள்ளிட்டோரைச் சந்திக்கிறார்.
2023 மே 24-ம் தேதியன்று ஆஸ்திரேலிய பிரதமர் அல்பேனீஸ் உடன் பிரதமர் இருதரப்பு சந்திப்பை நடத்தவுள்ளார். முன்னதாக மே 23-ம் தேதியன்று சிட்னியில் நடைபெறும் நிகழ்வில் இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்தோருடன் உரையாற்றுவார்.
***
AD/CR/DL
(Release ID: 1925910)
Visitor Counter : 159
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam