பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜப்பானிய பிரமுகர்களுடன் பிரதமரின் உரையாடல்

Posted On: 20 MAY 2023 12:06PM by PIB Chennai

ஜி-7 உச்சி மாநாட்டிற்கான ஹிரோஷிமா பயணத்தில், ​​ தொழில் துறையில் சிறந்து விளங்கும் ஜப்பானியப் பிரமுகர்களான டாக்டர் டோமியோ மிசோகாமி மற்றும் திருமதி ஹிரோகோ தகயாமா ஆகியோரை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார்.

 

டாக்டர். டோமியோ மிசோகாமி, ஒசாகா பல்கலைக்கழகத்தின்  பேராசிரியர், புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் மொழியியலாளர் ஆவார்.   ஹிந்தி மற்றும் பஞ்சாபி மொழிகளில் புலமை பெற்றவர். ஜப்பானில் இந்திய இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக அவருக்கு 2018 இல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. பிரபலமான "ஜ்வாலாமுகி" புத்தகத்தை அவர் பிரதமருக்கு வழங்கினார்.

 

ஹிரோஷிமாவில் பிறந்த திருமதி ஹிரோகோ தகயாமா ஒரு மேற்கத்திய பாணி ஓவியர் ஆவார். அவருடைய படைப்புகள் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இந்தியாவுடனான அவரது ஆழமான தொடர்பால் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவர் இந்தியாவில் பல பயிற்சி வகுப்புகள் மற்றும் கண்காட்சிகளை நடத்தியுள்ளார். மேலும் சாந்தி நிகேதனில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தில் வருகை பேராசிரியராக இருந்தவர். 2022 இல் உருவாக்கப்பட்ட  தனது முக்கிய படைப்புகளில் ஒன்றான புத்தபெருமானின் ஓவியத்தை அவர் பிரதமருக்கு வழங்கினார்.

 

பரஸ்பர புரிந்துணர்வை ஆழப்படுத்தவும், மரியாதை செய்யவும், நமது நாடுகளுக்கு இடையே வலுவான பிணைப்பை உருவாக்கவும் இத்தகைய தொடர்புகள் உதவுகின்றன. இந்தியா-ஜப்பான் இடையிலான சிறப்பான உறவு மற்றும் உலகளாவிய கூட்டாண்மை உறவுகளை மேலும் வலுப்படுத்த வழி வகுக்கும். இத்தகைய செழுமையான பரிமாற்றங்களுக்கான மேலும் பல வாய்ப்புகளை எதிர்நோக்குவதாகவும் பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

***

AD/CJL/DL




(Release ID: 1925818) Visitor Counter : 143