பிரதமர் அலுவலகம்
பெண்களின் சுய வேலைவாய்ப்புக்கான முயற்சிகளுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
16 MAY 2023 9:37AM by PIB Chennai
பெண்களின் சுய வேலைவாய்ப்புக்கான முயற்சிகளுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் திரு தேவேந்திர பட்னவிஸ் தனது ட்விட்டர் பதிவில், மும்பையைச் சேர்ந்த 27,000 பெண்களின் வாழ்க்கையில் மேம்பாட்டை ஏற்படுத்துவதற்காக தையல் மிஷின், மாவு அரைக்கும் இயந்திரம், மசாலாப் பொருள் தயாரிக்கும் இயந்திரம் போன்ற பல்வேறு உபகரணங்கள் மற்றும் கருவிகள் சுய வேலைவாய்ப்புக்கான பிர்ஹான் மும்பை மாநகராட்சி திட்டத்தின் கீழ் மும்பையின் சுனாபட்டியில் உள்ள சோமையா மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கப்பட்டன என்று தெரிவித்துள்ளார்.
துணை முதலமைச்சரின் ட்விட்டுக்கு பதிலளித்துள்ள பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:
“பெண்களுக்கு அதிகாரமளிப்பதை அதிகரிப்பது தொடர்பாக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பாராட்டத்தக்கது”
******
Release ID: 1924357
AP/GS/SG
(रिलीज़ आईडी: 1924387)
आगंतुक पटल : 181
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam