பிரதமர் அலுவலகம்
எல்லைப் பாதுகாப்புப் படையின் உள்கட்டமைப்பு தரம் உயர்த்தப்பட்டிருப்பதற்கு பிரதமர் பாராட்டு
प्रविष्टि तिथि:
09 MAY 2023 10:02PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நான்கு கூட்டுப் படைப் பிரிவுகள் தொடங்கப்பட்டிருப்பதன் மூலம் எல்லைப் பாதுகாப்புப் படையை பலப்படுத்தப்படுவதாக கூறியுள்ளார். ரூ.108.3 கோடி மதிப்பில் இரண்டு குடியிருப்பு வளாகங்கள் மற்றும் அதிகாரிகளுக்கான ஒரு உணவகம் உள்ளிட்ட திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்து, பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“நமது எல்லைப் பாதுகாப்பு பலம் பெறுவதுடன், துணிச்சல் மிகுந்த எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்களின் வாழ்க்கைத்தரமும் உயரும்”.
***
AD/ES/RR/RK
(रिलीज़ आईडी: 1923054)
आगंतुक पटल : 199
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam