பிரதமர் அலுவலகம்
சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நல்ல பிணைப்பை உருவாக்கியுள்ளது: பிரதமர்
Posted On:
15 APR 2023 10:09AM by PIB Chennai
மதுரையிலிருந்து சவுராஷ்டிரா சங்கமத்திற்குச் செல்லும் முதல் சிறப்பு ரயிலை மதுரையில் கொடியசைத்து தொடங்கி வைத்ததை பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டினார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இந்த சிறப்பான புத்தாண்டு தினத்தில், மதுரையில் இருந்து வெரவல் வரை ஒரு சிறப்பு பயணம் தொடங்கியுள்ளது. சவுராஷ்டிரா சங்கமம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாகும். இது மிகவும் சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், இந்த நிகழ்வு ஏற்படுத்தியுள்ள பிணைப்பு குறித்து பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
சவுராஷ்டிரா சங்கமத்திற்கானப் பயணம் ஏற்படுத்தியுள்ள பண்டிகை சூழல் குறித்துத் தெரிவித்துள்ள பிரதமர், ‘’ சவுராஷ்டிரா சங்கமத்தை நோக்கிய உற்சாகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது" எனக் கூறியுள்ளார்.
***
AD/CR/DL
(Release ID: 1916813)
Visitor Counter : 163
Read this release in:
Kannada
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam