பிரதமர் அலுவலகம்
ஆந்திரப்பிரதேசத்தின் மங்களகிரி எய்ம்ஸ் மருத்துவமனையின் சாதனைகளுக்குப் பிரதமர் பாராட்டு
Posted On:
05 APR 2023 11:13AM by PIB Chennai
ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள மங்களகிரி எய்ம்ஸ் மருத்துவமனையில் வெளிநோயாளிகளின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது குறித்து பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார். தமது மனதின் குரல் நிகழ்ச்சிகளில் ஒன்றில், தொலை மருத்துவ ஆலோசனையில் பயனடைந்த ஒருவர், மருத்துவருடன் கலந்துரையாடியதை குறிப்பிட்டதை திரு.மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.
10 லட்சம் வெளிநோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை அளித்துள்ளது குறித்து மங்களகிரி எய்ம்ஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்துள்ள பிரதமர் கூறியிருப்பதாவது:
“நிறுவனத்தின் சிறந்த சாதனை. அண்மையில் வெளியான மனதின் குரல் நிகழ்ச்சி ஒன்றில், மருத்துவர் ஒருவர் மற்றும் தொலை மருத்துவ ஆலோசனையால் பயனடைந்த ஒருவருடன் நடந்த கலந்துரையாடல் குறித்து நான் குறிப்பிட்டுள்ளேன்”.
*****
AP/PKV/RR
(Release ID: 1913802)
Visitor Counter : 130
Read this release in:
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam