பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்திய கப்பற்படைக்கு 11 நவீன கடலோர ரோந்து வாகனங்கள், 6 நவீன ஏவுகணை வாகனங்கள் வாங்குவதற்கு இந்திய கப்பல் கட்டும் தளங்களுடன் ரூ.19,600 கோடிக்கான ஒப்பந்தங்களில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது

இது கப்பற்படையை வலுப்படுத்தும் என்றும் தற்சார்பு என்ற நமது நோக்கத்திற்கு உத்வேகம் அளிக்கும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்

Posted On: 31 MAR 2023 9:11AM by PIB Chennai

இந்தியக் கப்பற்படைக்கு 11 நவீன கடலோர ரோந்து வாகனங்கள், 6 நவீன ஏவுகணை வாகனங்கள் வாங்குவதற்கு இந்திய கப்பல் கட்டும் தளங்களுடன்  ரூ.19,600 கோடிக்கான ஒப்பந்தங்களில் பாதுகாப்பு அமைச்சகம் 2023, மார்ச் 30 அன்று  கையெழுத்திட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் ட்விட்டர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சக ட்விட்டர் செய்திக்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது;

இது கப்பற்படையை வலுப்படுத்தும் மற்றும் தற்சார்பு என்ற நமது நோக்கத்திற்கு உத்வேகம் அளிக்கும்.”

***

(Release ID: 1912400)

AD/SMB/AG/RR


(Release ID: 1912462) Visitor Counter : 142