பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரபல யக்ஷகான பின்னணிப் பாடகர் திரு.பாலிப நாராயண பாகவதா மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 17 FEB 2023 10:26AM by PIB Chennai

பிரபல யக்ஷகான பின்னணிப் பாடகர் திரு.பாலிப நாராயண பாகவதா மறைவுக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது;

 

திரு.பாலிப நாராயண பாகவதா கலாச்சார உலகில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளார். யக்ஷகான பின்னணிப் பாடலுக்குத் தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட அவர், தனது மிகச் சிறந்த பாணிக்காக போற்றப்பட்டவர். அவரது பணிகள் வரும் தலைமுறைகளால் போற்றப்படும். அவரது மறைவால் துயருற்றேன். அவரது குடும்பத்தினருக்கு இரங்கல்கள். ஓம் சாந்தி.”

***

 (Release ID: 1900033)

VL/SMB/RR


(रिलीज़ आईडी: 1900062) आगंतुक पटल : 193
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam