பிரதமர் அலுவலகம்

மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200வது பிறந்த ஆண்டினை நினைவுகூரும் ஓராண்டு கால கொண்டாட்டங்களை பிப்ரவரி 12 அன்று பிரதமர் தொடங்கிவைக்க இருக்கிறார்


முற்காலத்தில் பரவலாக இருந்த சமூக சமத்துவம் இன்மைக்கு எதிராக 1875ல் ஆரிய சமாஜத்தை நிறுவியவர், சமூக சீர்திருத்தவாதியான மகரிஷி தயானந்த சரஸ்வதி

நாட்டின் சமூக, கலாச்சார விழிப்புணர்வில் ஆரிய சமாஜம் முக்கியப் பங்கு வகித்துள்ளது

சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் முக்கிய ஆளுமைகள், குறிப்பாக யாருடைய பங்களிப்புகள் இந்திய அளவில் இன்னமும் ஏற்கப்படாதவர்களைக் கொண்டாடப் பிரதமர் மோடியின் அரசு உறுதிபூண்டுள்ளது

Posted On: 11 FEB 2023 10:40AM by PIB Chennai

மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200வது பிறந்த ஆண்டினை நினைவுகூரும் ஓராண்டு கால கொண்டாட்டங்களை 2023, பிப்ரவரி 12 அன்று காலை 11 மணிக்கு தில்லியில் உள்ள இந்திரா காந்தி  உள்விளையாட்டரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிவைப்பார். இந்த நிகழ்வில் திரண்டிருப்போரிடையே பிரதமர் உரையாற்றுவார். 

 

1824, பிப்ரவரி 12 அன்று பிறந்த மகரிஷி தயானந்த சரஸ்வதி, சமூக சீர்திருத்தவாதியாக இருந்தார்.  முற்காலத்தில் பரவலாக இருந்த சமூக சமத்துவம் இன்மைக்கு எதிராக 1875ல் ஆரிய சமாஜத்தை இவர் நிறுவினார். சமூக சீர்திருத்தங்கள், கல்வி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்த ஆரிய சமாஜம் நாட்டின் சமூக, கலாச்சார விழிப்புணர்வில்  முக்கியப் பங்கு வகித்துள்ளது.

 

சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் முக்கிய ஆளுமைகள், குறிப்பாக யாருடைய பங்களிப்புகள் இந்திய அளவில் இன்னமும் ஏற்கப்படாதவர்களைக் கொண்டாடப் பிரதமர் மோடியின் அரசு உறுதிபூண்டுள்ளது. பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த நாளை பழங்குடியினர் கௌரவ தினமாக அறிவித்ததிலிருந்து ஸ்ரீ அரவிந்தரின் 150வது பிறந்த நாளை நினைவுகூரும் நிகழ்வில் பங்கேற்றது வரை இத்தகைய முன்முயற்சிகளில் பிரதமர் திரு நரேந்திர மோடி முன்னணியில் இருக்கிறார்.

***

SMB / DL



(Release ID: 1898280) Visitor Counter : 232