பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் பிப்ரவரி 12-ம் தேதி ராஜஸ்தானுக்கும், பிப்ரவரி 13-ம் தேதி கர்நாடகாவுக்கும் பயணம்

Posted On: 11 FEB 2023 10:14AM by PIB Chennai

ராஜஸ்தானின் தௌசாவில் சுமார் ரூ 18,100 கோடி  மதிப்பீட்டிலான நெடுஞ்சாலை திட்டங்களுக்கு

பிரதமர் அடிக்கல் நாட்டி,  நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

 

புதுதில்லி மும்பை விரைவுச்சாலையின் புதுதில்லி – தௌசா – லால்சோட் பகுதியை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் – இந்தப் பிரிவு புதுதில்லியிலிருந்து ஜெய்ப்பூருக்கு பயண நேரத்தை சுமார் 5 மணி  நேரத்திலிருந்து சுமார் 3.5 மணி நேரமாகக் குறைக்கும்.

 

14வது ஏரோ இந்தியா 2023-ஐ பெங்களூருவில் பிரதமர் தொடங்கி வைக்கிறார்

 

‘மேக் இன் இந்தியா, மேக் ஃபார் தி வேர்ல்ட்’ என்ற பிரதமரின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப, உள்நாட்டு உபகரணங்கள்/தொழில்நுட்பங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது குறித்து  ஏரோ இந்தியா 2023-யில் தனிக்கவனம் செலுத்தப்படும்

 

பிரதமர் திரு நரேந்திர மோடி பிப்ரவரி 12-ம் தேதி ராஜஸ்தானுக்கும், பிப்ரவரி 13-ம் தேதி கர்நாடகாவிற்கும் பயணம் மேற்கொள்கிறார்.

 

 

பிப்ரவரி 12-ம் தேதி, பிற்பகல் 3 மணியளவில், அவர் தௌசாவை அடைந்து, சுமார் ரூ 18,100 கோடி  மதிப்பீட்டிலான நெடுஞ்சாலை திட்டங்களுக்கு

பிரதமர் அடிக்கல் நாட்டி,  நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

 

பிப்ரவரி 13-ம் தேதி, காலை 9:30 மணியளவில், பெங்களூரில் உள்ள யெலஹங்காவில் உள்ள விமானப்படை நிலையத்தில் 14வது  ஏரோ இந்தியா 2023 நிகழ்வை அவர் தொடங்கி வைக்கிறார்.

 

தௌசாவில் பிரதமர்

 

புதிய இந்தியாவின் வளர்ச்சி, மேம்பாடு மற்றும் இணைப்பின் இயந்திரமாக திகழும் சிறந்த சாலைக் கட்டமைப்பை வசதிகளை உருவாக்குவது குறித்த பிரதமரின் முக்கியத்துவம், நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் உலகத் தரம் வாய்ந்த விரைவுச் சாலைகள் திட்டங்கள் மூலம் உணரப்படுகிறது. அத்தகைய முக்கியமான திட்டங்களில் ஒன்று புதுதில்லி மும்பை விரைவுச்சாலை ஆகும்.  இதன் முதல் கட்டமான புதுதில்லி - தௌசா - லால்சோட், பிரதமரால் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்படும்.

 

புதுதில்லி மும்பை விரைவுச் சாலையின் 246 கிலோமீட்டர் அளவிலான பாதை புதுதில்லி - தௌசா - லால்சோட் பகுதி ரூ.12,150 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுதில்லியிலிருந்து ஜெய்ப்பூருக்கு பயண நேரத்தை 5 மணி நேரத்திலிருந்து சுமார் 3.5 மணி நேரமாகக் குறைத்து, முழுப் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் ஊக்கத்தை அளிக்கும்.

 

புதுதில்லி மும்பை விரைவுச்சாலை 1,386 கிலோமீட்டர்  நீளம் கொண்ட இந்தியாவின் மிக நீளமான விரைவுச்சாலை ஆகும். இது புதுதில்லி மற்றும் மும்பை இடையேயான பயண தூரத்தை 1,424 கிலோமீட்டர்  முதல் 1,242  கிலோமீட்டர் வரை அதாவது 12 சதவீதமாக  குறைக்கும். மேலும் பயண நேரம் 24 மணிநேரத்தில் இருந்து 12 மணி நேரமாக 50 சதவீதமாக  குறைக்கப்படும். இது புதுதில்லி, ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய ஆறு மாநிலங்களை கடந்து கோட்டா, இந்தூர், ஜெய்ப்பூர், போபால், வதோதரா மற்றும் சூரத் போன்ற முக்கிய நகரங்களை இணைக்கும். இந்த விரைவுச்சாலையானது பிரதமரின் கதி சக்தி 93  பொருளாதார முனைகள், 13 துறைமுகங்கள், 8 முக்கிய விமான நிலையங்கள், 8 பல்நோக்கு மாதிரி தளவாட பூங்காக்கள் ), புதிதாக வரவிருக்கும் பசுமை  விமான நிலையங்களான ஜேவர், நவி மும்பை மற்றும் ஜேஎன்பிடி துறைமுகம் ஆகியவற்றிற்கு முக்கிய இணைப்பு சாலையாக பயன்படும். அதிவேக நெடுஞ்சாலையானது அனைத்து அண்டை பிராந்தியங்களின் வளர்ச்சிப் பாதையில் பொருளாதார மேம்பாட்டு தாக்கத்தை ஏற்படுத்தும்.  நாட்டின் பொருளாதார மேம்பாட்டில் முக்கிய பங்களிப்பை வழங்கும்.

 

நிகழ்ச்சியின் போது, ரூ 5,940 கோடிக்கும் அதிகமான திட்ட மதிப்பீட்டில் உருவாக்கப்படும் 247 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இதில், பண்டிகுய் முதல் ஜெய்ப்பூர் வரையிலான 67 கிலோமீட்டர் நீளமுள்ள நான்கு வழிச்சாலை, ரூ 2,000 கோடி செலவிலும், கோட்புட்லி முதல் பரோடானியோ வரையிலான ஆறு வழிச்சாலை, சுமார் ரூ 3,775 கோடி மதிப்பீட்டிலும் உருவாக்கப்படும். மேலும் லால்சோட் - கரோலி பகுதியில் இருவழி அவசர நிறுத்தப்பாதை  சுமார் ரூ 150 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகிறது.

 

பெங்களூருவில் பிரதமர்

 

ஏரோ இந்தியா 2023-ன் 14வது நிகழ்வை பெங்களூரு யெலஹங்காவில் உள்ள விமானப்படை நிலையத்தில் பிரதமர் தொடங்கி வைக்கிறார். ஏரோ இந்தியா 2023-ன் கருப்பொருள் “ஒரு பில்லியன் வாய்ப்புகளுக்கான ஓடுபாதை” ஆகும்.

 

‘மேக் இன் இந்தியா, மேக் ஃபார் தி வேர்ல்ட்’ என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, உள்நாட்டு உபகரணங்கள்/தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டுறவை ஏற்படுத்துதல் ஆகியவற்றில் இந்த நிகழ்வு கவனம் செலுத்தும்.

இந்திய பாதுகாப்புத் துறையில் ஆத்மநிர்பர்தா-தற்சார்பு இந்தியா குறித்த பிரதமரின் முக்கியத்துவமும் இதில் முன்னிறுத்தப்படும்.  இந்நிகழ்ச்சியில் நாட்டின் வடிவமைப்புத் தலைமைத்துவம், யுஏவித் (ஆளில்லாத விமானம்) துறையில் வளர்ச்சி, பாதுகாப்பு விண்வெளி மற்றும் எதிர்காலத் தொழில்நுட்பங்கள் போன்றவற்றில் நாட்டின் முன்னேற்றத்தை வெளிக்கொணரும் விதமாக அமையும். மேலும், இந்நிகழ்வு, இலகுரக போர் விமானம் (எல்சிஏ)-தேஜாஸ், எச்டிடி-40, டோர்னியர் லைட் யூட்டிலிட்டி ஹெலிகாப்டர் (எல்யுஎச்), லைட் காம்பாட் ஹெலிகாப்டர் (எல்சிஎச்) மற்றும் அட்வான்ஸ்டு லைட் ஹெலிகாப்டர் (ஏஎல்எச்) போன்ற உள்நாட்டு விமான தயாரிப்புகளின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் விதமாக காட்சிப்படுத்தப்படும். உலகளாவிய விநியோகச் சங்கிலியில் உள்நாட்டு குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஒருங்கிணைக்கவும், மேம்பாட்டுடன் கூடிய உற்பத்திக்காக இணைந்து செயல்படுவது தொடர்பான நடவடிக்கைகள் உட்பட வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும் இந்த நிகழ்வு உதவும்.

 

ஏரோ இந்தியா 2023-ல் 80க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும். ஏரோ இந்தியா 2023-ல் சுமார் 30 நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் உலகளாவிய மற்றும் இந்திய அசல் இயந்திர உற்பத்தித் துறையின் 65 தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்க வாய்ப்புள்ளது.

 

ஏரோ இந்தியா 2023 கண்காட்சியில் சுமார் 100 வெளிநாட்டு மற்றும் 700 இந்திய நிறுவனங்கள் உட்பட 800 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு நிறுவனங்கள் பங்கேற்கும்.

கண்காட்சியில் பங்கேற்கும் இந்திய நிறுவனங்களில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்-அப்கள் நிறுவனங்களும் அடங்கும்.  இது நாட்டின் முக்கிய தொழில்நுட்பங்களின் முன்னேற்றம், விண்வெளி மற்றும் பாதுகாப்பு திறன்களின் வளர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அமையும்.

ஏரோ இந்தியா 2023-ல் ஏர்பஸ், போயிங், டசால்ட் ஏவியேஷன், லாக்ஹீட் மார்ட்டின், இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரி, பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ், ஆர்மி ஏவியேஷன், எச்.சி ரோபோடிக்ஸ், எஸ்.ஏ.ஏ.பி., சஃப்ரான், ரோல்ஸ் ராய்ஸ், லார்சன் & டூப்ரோ, லியர்ஸ் அண்ட் டூப்ரோ, லைமிட் லைப்ரோ, லைமிட், பாரத் எச்.எல்), பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் , பாரத் டைனமிக்ஸ் லிமிடெட்  மற்றும் பி‌இ‌எம்‌எல்  லிமிடெட் போன்ற நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.

***

PKV / GS / DL


(Release ID: 1898250) Visitor Counter : 178