பிரதமர் அலுவலகம்
உலகக் கோப்பை ஹாக்கி -2023 ல் பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
11 JAN 2023 6:35PM by PIB Chennai
ஒடிசாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி-2023-ல் பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"2023 உலகக் கோப்பை ஹாக்கி போட்டி, ஒடிசாவில் தொடங்கும் இந்த வேளையில், இதில் பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் எனது நல்வாழ்த்துகள். இந்தப் போட்டி, விளையாட்டுத் திறனை மேலும் வலுப்படுத்தட்டும். அழகான ஹாக்கி விளையாட்டை மேலும் பிரபலப்படுத்தட்டும். இந்தப் போட்டியை நடத்துவதில் இந்தியா பெருமை கொள்கிறது."
இவ்வாறு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
***
VT/PLM/RS/RJ
(रिलीज़ आईडी: 1890498)
आगंतुक पटल : 205
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
Kannada
,
Assamese
,
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu