பிரதமர் அலுவலகம்
தீபாவளி அன்று கார்கிலில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
Posted On:
24 OCT 2022 2:23PM by PIB Chennai
பாரத் மாதாகி ஜெய்!
பாரத் மாதாகி ஜெய்!
கார்கில் பூமியின் மதிப்பு என்பது எப்போதும் ராணுவத்தில் நமது துணிச்சல் மிக்க புதல்வர்களையும் புதல்விகளையும் நோக்கியதாக இருக்கிறது. பல ஆண்டுகளாக எனது குடும்பத்தின் ஒரு பகுதியாக நீங்கள் இருக்கிறீர்கள். வீரர்களுடன் இருக்கும்போது தீபாவளியின் இனிமை கூடுகிறது. "ஒரு பக்கம் நமது தேசத்தின் இறையாண்மை மிக்க எல்லைகள் இருக்கின்றன மறுபக்கம் உறுதி பூண்ட வீரர்கள் இருக்கிறார்கள். ஒரு பக்கம் நாம் நமது தாய் நாட்டை நேசிக்கிறோம் மறுபக்கம் தீரமிக்க ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள். இவ்வளவு உச்சத்தில் எங்கேயும் தீபாவளியை நான் எதிர்பார்க்க முடியாது." இந்த வீரர்களின் தைரியத்தையும் துணிவையும் இந்தியா பெருமிதத்தோடு கொண்டாடுகிறது இன்று வெற்றிகரமான கார்கிலிலிருந்து இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் நான் மிக மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
இந்தியாவை நாம் மதிப்பது வெறும் புவியியல் பகுதியாக அல்ல வாழும் உணர்வாக, நிலையான உணர்வாக, அழியாத வாழ்வாகக் கருதுகிறோம். இந்தியாவைப் பற்றி நாம் பேசும்போது அதன் தொன்மையான கலாச்சாரம் முன்னுக்கு வருகிறது. இந்தியா மிகவும் பாதுகாப்பான இடத்தில் உள்ளது .ஒரு பக்கத்தில் மிக உயர்ந்த இமய மலைகள் இருக்கின்றன, மறுபக்கத்தில் இந்திய பெருங்கடல் சூழ்ந்திருக்கிறது. ஒரு தேசம் அழியாமல் நீடிக்கிறது என்றால் அந்நிலத்தின் தீரமிக்க புதல்வர்களும் புதல்வியரும் அவர்களின் பலத்திலும் வளத்திலும் முழு நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்பது பொருளாகும் என அவர் விவரித்தார்.
நண்பர்களே,
கார்கில் போர்க்களம் இந்திய ராணுவத்தின் வீரத்திற்கு ஒளிரும் உதாரணமாகும். த்ராஸ், பட்டாலிக், டைகர் ஹில் ஆகியவை இந்திய ராணுவத்தின் துணிச்சல் மற்றும் வீரத்திற்கு முன்னால் எதிரிகள் தலைவணங்கிய மலையின் உச்சிகள் என்பது நிரூபிக்கப்பட்டன. இந்தியாவின் எல்லைகளில் இருக்கின்ற மனிதர்கள் இந்தியப் பாதுகாப்பின் உறுதியான தூண்கள் ஆவர். ஒரு நாடு பாதுகாப்பாக இருக்கிறது என்றால் அதன் எல்லைகள் பாதுகாப்பாக இருக்கின்றன, அதன் பொருளாதாரம் வலுவாக இருக்கிறது, தன்னம்பிக்கையால் சமூகம் நிறைந்துள்ளது என்பது அதன் பொருள். நாட்டின் வளம் பற்றிய செய்தியை நாம் கேட்கும்போது ஒட்டுமொத்த தேசத்தின் மன உறுதியும் உயர்கிறது. தூய்மை இந்தியா இயக்கம், மின்சாரம் மற்றும் குடிநீருடன் உரிய நேரத்தில் ஒப்படைக்கப்பட்ட வீடுகள் ஆகியவற்றிற்காக ஒவ்வொரு ராணுவ வீரரும் பெருமிதம் கொள்வார்கள். இந்த சேவைகள் ராணுவ வீரர்களின் வீடுகளுக்கு செல்வது குறைவாக இருந்தாலும் இது அவர்களுக்கு திருப்தியைத் தரும். புதிய கண்டுபிடிப்புக்கான தொழில் இயங்குவதை மனதில் கொண்டு 80,000த்திற்கும் அதிகமான புத்தொழில்கள் உருவாகியுள்ளது. அகண்ட அலைவரிசை இணையதளத்தை விரிவு படுத்துவதற்காக ஒரே நேரத்தில் 36 செயற்கைக்கோள்களை செலுத்தி இரண்டு நாட்களுக்கு முன் இஸ்ரோ சாதனை நிகழ்த்தியுள்ளது.
நண்பர்களே,
எல்லையில் நீங்கள் கேடயம் போல் நிற்கிறீர்கள். அதே சமயம் நாட்டிற்குள் இருக்கின்ற எதிரிகளுக்கு எதிரான நடவடிக்கையும் கண்டிப்புடன் மேற்கொள்ளப்படுகிறது. பயங்கரவாதம், நக்சலிசம், தீவிரவாதம் ஆகியவற்றை வேரறுக்கும் முயற்சியில் நாடு வெற்றி பெற்றுள்ளது ஊழல் செய்தவர் எவ்வளவு சக்தி மிக்கவராக இருந்தாலும் சட்டத்திலிருந்து அவரால் தப்ப முடியாது. தவறான நிர்வாகம், நமது வளர்ச்சிப் பாதையில் தடைகளை உருவாக்கி நாட்டின் ஆற்றலைக் குறைத்து விட்டது. அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி என்ற மந்திரத்துடன் பழைய குறைகளை எல்லாம் நாங்கள் வெகு வேகமாக நீக்கி வருகிறோம்.
நண்பர்களே,
இந்திய ராணுவங்களில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன ஆயுதங்களின் இருப்பு நாட்டின் பாதுகாப்பு அம்சத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிகமான பாதுகாப்பு சாதனங்கள் இனிமேல் வெளிநாட்டில் இருந்து வாங்கப்பட மாட்டாது, இவை இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டவையாக இருக்கும். உள்நாட்டு ஆயுதங்களை பயன்படுத்துவதன் மூலம் இந்திய ராணுவ வீரர்கள் தங்களின் நம்பிக்கையில் உச்சத்தை தொடுவார்கள், எதிரிகளின் மன உறுதியை நசுக்க இது ஒரு வியத்தகு விஷயமாக இருக்கும். இப்போது இந்தியா பாதுகாப்பு சாதனங்களின் ஏற்றுமதியாளராக மாறி இருக்கிறது. ட்ரோன்கள் போன்ற நவீனமான, பயன்பாட்டிற்கு உகந்த தொழில்நுட்பத்தைக் கண்டறிய விரைவாக செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மீண்டும் ஒருமுறை உங்களுக்கும், குடிமக்களுக்கும் உலகில் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்களை எனது சார்பிலும், ராணுவ வீரர்களின் சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாரத் மாதாகி ஜெய்!
பாரத் மாதாகி ஜெய்!
பாரத் மாதாகி ஜெய்!
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
**************
(Release ID: 1870960)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam